பக்கம்:ரூபாவதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

(ஒரு வேடன் வருகின்றன்.) வேடன்:-ஏன் ஐயா! இப்படியளுகிறிய உங்களுக்கு-ஆகாகாகா யாரோ அம்மா ! என்ன மயக்கமோ? இதோ தண்ணியிருக்குது. தெளி யுங்க முகத்திலே. -

(வழுதியார் தண்ணிர் தெளிக்கின்முர்) - சற்குணன்-கொஞ்சம் அம்மாவுக்கு வெய்யில் மறைவாய் கில் அப்பா! -- . (வேடன் அவ்வாறு சிற்றலும், வழுதியார் துக்கிமேலே சாய்த்துக் கொள்கின்ருர் ; சுந்தரி மூர்ச்சை தெளிகின்ருள்.) சுந்தரி:-ஹா ஹ- ! சற்குணன்:-என் பிராண நாயகியே! எனக்குத் தைரியஞ் சொன்னயே! நீ இவ்வாறு மூர்ச்சைபோய் என்னைத் துன்பப்படுத்துதல் சரியா குமோ? நீ யப்படியே உயிர் துறந்திருப்பையாயின் யான்தான் பிழைப்பேனே? இவையெல்லாம் எம்பெருமாள் விளையாட்டே i யல்லவோ? அவனின்றி யோரணுவும் அசையாது” என்ற பெரியோர் வசனம் பொய்த்துப் போகுமோ ? என்முத்தே! என் மீது சாய்ந்து கொண்டு சற்று இளைப்பாறுவாய் ! - வேடன்:-ஐயா ! இங்கே புலிகாடி முதலிய பிராணிய சுத்தித்திரியுமே.

இங்கே யிருக்கக் கூடாதே- - s - சற்குணன்:-நாங்கள் சாகவேண்டியதும் கடவுளுக்கு இஷ்டமானல் அதுவும் - கடந்தே தீரும். அதற்காக நாம் பயப்படுவதேன் ?

சுந்தரி:-அப்படியில்லை. நாம் நம்மாலான முயற்சிகளைச் செய்தால் கடக்கிற படி நடக்கட்டும். கடவுள் நம்முடைய செயல்கள் மூலமாகவே தான் நமக்கு நன்மை யினையுங் தீமையினையும் விளைக்கின்றர். ஆகையால் நாம் ஒன்றுஞ் செய்யாதிருந்தால் நமக்கு நன்மை விளைவதெப்படி ? சற்குணன்:-எனதருமைத் தலைவியே! நீ சொல்வன வெல்லாம் கியாயந்தாம்.

நாம் இப்பொழுது தங்கி யிருப்பதற்கு இடம் எங்கே? வேடன்:-ஐயா! நீங்க அதுக்கு யோசனை செய்யவேண்டாம். இதுக்கரு காலே இரண்டு நாளியவளித் துணாக்கிலே ஒரு சாமியார் சாவடி யிருக்குது. இப்போ உங்களைக் கூட்டிப் போய் அந்தச் சாமியார் மடத்திலே விட்டுப்போட்டு அப்புறம் வீட்டுக்குப் போறேன். சற்குணன்:-அந்தச் சாமியார் பெயரென்ன? . . . வேடன்:-அது எனக்குத் தெரியாது சாமி. அவர் சாவடி மாத்திாங்'

தெரியும். வருகிறதிண்டா வாங்க. - . சற்குணன்:-கொஞ்சம் பொறுத்துக்கொள். அப்பா வருகிருேம்:-ஏன்,

புறப்படுவமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/25&oldid=656978" இலிருந்து மீள்விக்கப்பட்டது