பக்கம்:ரூபாவதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 41

சுந்திராகந்தன்:-இன்றைக்கு ஏதாவது விசேஷம் இருக்கத்தான் வேண்டும். இல்லாவிடிற் சந்திரமுகன் இவ்வளவு தாமதம் செய்ய மாட்டான். சுகுமாரன்:-அவனும் வருகிற சமயங்தானே வந்துவிடுவான். இது கிடக் கட்டும். அது மூன்று பெண்களும் பேசிக் கொண்டதிலிருந்து ஒன்று படுகின்றது. - - சுந்தராகந்தன்:-அஃதென்ன? எனக்கொன்றுக் தோன்றவில்லையே! எங்கே? - அஃது இன்னதென்று சொல்லு. கேட்போம். சுகுமாரன்:--இதுவா? சொல்லுகின்றேன் கேள். அரசன் புத்திரி ரூபா வதிக்கு உன் பேரிற் கொஞ்சம் பிரியமிருக்கிறது என்பது காணப் படுகின்றது. சுந்தராகந்தன்:-அஃதெப்படிக் கண்டாய்? வெகு நன்ருயிருக்கின்றதே! சுகுமாரன்:-அவர்கள் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையிலிருந்து நான் ; அதுமானித்துக் கொண்டேன். சுந்தராகந்தன்:-அப்படியால்ை எனக்கேன் தோன்றவில்லை? சுகுமாரன்:-அஃதென்னேயோ? யானறியேன். என் மனத்தில் தோன்றின

தைச் சொன்னேன். அதைத்தவிர வேறில்லை. சுந்தராகந்தன்:-ஆயின் அமையும். ஒவ்வொருவரும் தமது மனத்தில் தமக்கு வேண்டியனவற்றை யெல்லாம் கினைத்துக்கொள்ளலாம்.-ஆயினும் எனக்குத் தோன்றுகிற மட்டில் அந்த மூன்று பெண்களும் நாம் நேற்றைப் பேசிக்கொண்டிருந்த சங்கதிகளை யொளித்துக் கேட் டிருப்பார்களோ வென்பது தோன்றுகின்றது. ஏனென்ருல் என் னேக்குறித்த ரூபாவதி கேற்று மூர்ச்சை போய் விழுந்தானே, - அவனு? என்று கேட்டாள். சுகுமாரன்:-ஆனல் வெகு நல்லதாயிற்றே! சுந்தராகந்த்ன்:-அஃதெப்படி யப்பா? சுகுமாரன்:-உன் பேரில் இரக்கங்கொண்டு ஒரு வேளை தன் தகப்பளுரைக் கேட்டு உன்னைச் சிறைச்சாலையி னின்றும் விட்டுவிடச் சொல்லக் கூடும். அதனுலேதான் நல்லதென்றேன். - .. சக்தராகந்தன்:-அப்படித்தான் அவள் செய்வாளென்பதென்னே? ஒரு - வேளை யென்னுடைய சங்கதிகளை யெல்லாங் தன் தகப்பனரிடஞ் சொல்லி யென்னே யின்னும் அதிகமான துன்பங்களுக்கு ஏன் 'உட்படுத்த மாட்டாள்? அப்படிச் செய்தாலுஞ் செய்யக் கூடுமே! க்குமாரன்:-கான் -- அவளைப்பற்றிக் கேள்விப்பட்ட மட்டில் அவள் சல்ல வ்ளே என்பது தோன்றுகின்றது. ஆகையால் நீ நினைக்கிறபடி அவள் செய்யமாட்டாள் என்பதற்கு ஆக்ஷேபமே யில்லை. சுந்தராநந்தன்:-அப்படியானல் என் ஆலவாய்த் தேவனே யான் பாடிக்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/42&oldid=657016" இலிருந்து மீள்விக்கப்பட்டது