பக்கம்:ரூபாவதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வி. கோ. சூரியாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

குத் தெரியக் காரணமு முண்டு. எழுத்தைப் பார்த்தாலும் மகளிரெழுத்தாகவே காணப்படுகின்றது. ஏ. ரூபாவதி உன் இாக்கத்தை யென்னென்று சொல்லுவேன் ஆம், தோன் இந்தத் திறவுகோலை யெடுக்கக்கூடும். ஆ. இந்த நள்ளிரவில் இவ் விடம் எவ்வாறு வந்தனையோ? இதுவரையும் விழித்திருந்தாயோ? ஏழையேன் மீதும் உனக்கு இவ்வளவு அன்புளதோ ? உள தெனிற் பிழைத்தேன்! ஈடேறினேன்! தன்யனுயினேன்! உன்னன் புடைய எனக்கு இனிமேல் என்ன குறையோ? என் தலைவி யெழு கிய கடிதத்தை மீட்டும் படித்துக்களிகூர்வேன். (கடிதத்தை மீட்ம்ெ படிக்கின் முன்.) ஐயோ! என்னுடைய நன்மைநாடி யென்று கையெ ழுத்திட்ட நாயகியே! 'தன்மைகாடி யென்றபெயர் உனக்கே தகும்! என்மீதுள்ள காதலினல் தன் தகப்பனரையும் யமைெனக் கூறு கின்ற உத்தமியே! உன்னே நாளை யான் நேரிற்காண்பேன். கண்டு என் துன்பமெல்லாஞ் சொல்லி யா அறுவேன்.-ஆகா ! நின் லெளகீக விஷய ஞானத்தின் முதிர்ச்சியை யென்னென்று சொல்லுவேன்! மாதர்கட்குரிய மென்மைத் தன்மை வழுவாது, ஆண் மக்களுக் குரிய முறைப்படி யெழுதிய மோகன முத்தே! நீ சொல்லிய படியே இந்தக் கடிதத்தைப்பத்திரமாய் வைப்பேன். இந்தத் திறவு கோலையும் சாவதானமாய் ஒளித்து வைப்பேன். ஆ அதோ அங்கே பேச்சுக்குரற் கேட்கின்றதே! இதோ விளக்கை யவிப் பேன் (விளக்கவிக்கின்முன்) இனி யிவ்விடத்திலிருக்கப்படாது.

(சுந்தாாசக்தன் போகின்மூன்.)

நான்காங் களம் இடம்:-இாாசமகிஷியி னந்தப்புரம் காலம்:-பிற்பகல் பாத்திரங்கள்:-சூரசேகன், ரூபாவதி சூரசேகன்:-குழந்தாய் ரூபாவதி என்ன செய்து கொண்டிருக்கின்ருய்? இந்த ஊருனக் கெப்படி யிருக்கிறது?-அழகா யிருக்கிறதா? ருபாவதி:-ஏன்? இந்தவூருக் கென்னகுறைவு என்ருய்த் தானிருக்கிறது. நம்முடைய கருவூரைப் பார்க்கிலும் இது மிக அழகாய்த்தா னிருக் கின்றது. அரண்மனையும், அரண்மனையைச் சுற்றிக் கோட்டையும், கோட்டையைச் சுற்றி அகழியும், அகழியைச் சுற்றிப் பூஞ்சோல் யும், பூஞ்சோலைக்குப் பக்கத்தில் வையையாறும் வெகு நேர்த்தி யான காட்சிகளாய்த்தா மிருக்கின்றன. இந்த மீனுட்சிதேவி கோயி லொன்றேபோதுமே கங் கருவூரைவிட இவ்வூர் மேலானதென்று சொல்லுகிறதற்கு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/61&oldid=657058" இலிருந்து மீள்விக்கப்பட்டது