பக்கம்:ரூபாவதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 S. GತT. சூரியாாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

(தந்திர ாேன் வருகின் முன்.) சுந்தரன் :-அதோ! தந்திரதீரரும் வந்துவிட்டார்! வீரேந்திரன் :-தந்திரதிரரே என்ன சங்கதி? உம்மை ஆள்விட்டடித்த சூா

- சோன் உயிரோடிருக்கிறமட்டும் சும்மா இருப்போமா ? தந்திரதீரன் :-அவன்முன் இவர்களை ஏவிஞனே அல்லது இவர்கள் திருடர் களேயோ? தெரியவில்லை. அடியேன் அடிபட்டது என்னவோ உண்மை ! - சுந்தரன் :-உம்மையடித்த அந்தக் கயவர்கள் பேச்சினின்றும் அவர்கள் சோ நாட்டாரோ அல்லது பாண்டிநாட்டாரோ என்று தீர்மானித் திருக்கலாமே ? தந்திரதீரன் :-அஃதென்னையோ? அவர்கள்பேச்சை யான் நன்ருய்க் கவ

னித்திலேன். - வீரேந்திரன் :-சரி. இருக்கட்டும். அந்தப்பயல் சூரசேன் துதிற்கு என்ன

வுத்தாங் கொடுத்தான்? தந்திரதீரன் :-சூரசேன் தான் பாண்டிய நாட்டை விடுவதில்லையென்றும், யுத்தத்திற்குச் சன்னத்த னென்றும் உத்தரஞ் சொல்வி விடுத் தான். அவ்வளவுதான். வேருென்றும் அவன் சொல்லவில்லை. சற்குணன் :-தங்கிரதிரரே விேர் சென்று தூதுரைத்தபோது சூரசேநனெடு

- கூட இருந்தவர் யாவர். தந்திரதீரன் :-யாரோ மந்திரிபோலும் ! நான் தூதுரைத்தபோது அவர்

ஒன்றும் பேசவில்லை. சுந்தரன் :-யார்? சுசீலரோ ? சற்குணன் :-ஆமாம். சுசீலர்தாம். - வீரேந்திரன் :-உங்களிடத்தில் மந்திரியா யிருந்தவர் தாம்ே: சற்குணன் -ஆமாம். அவர்தாம். வீரேந் திரன்.-சுந்தரரே ! நீர்போய் நமது சேனைத் தலைவனிடம் போர்வீரரை - ஆயத்தப் படுத்திக்கொண்டு மதுரைமாநகரை நோக்கி வஞ்சி மாலை குடி வஞ்சக வஞ்சியாைெடு வஞ்சிப்போர் செய்வதற்கு இப் பொழுதே புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லும். நீருங் கூடவே இருந்து சேனைத்தலேவற்குப் படைவகுப்பதில் உதவிசெய்யும். ருேமொரு வியூகத் தலைவராயிருந்து சேனையை நடத்தும். சீக்கிாம். தாமதஞ் செய்யாதீர். - (சுர்தான் போகின்றன்) வீரேந்திரன்-என்? சற்குண வழுதியாரே! நாமும் புறப்பட்டுப் போவதற்குத்

திக்க ஏற்பாடுகள் செய்யவேண்டாமா? சற்குணன்:-ஆம். செய்ய்வேண்டும்.

• ** - " " - 3 & , - (யாவரும் போகின்றனர்.)

நான்காம் அங்கம் முற்றிற்று.

-**

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/93&oldid=657130" இலிருந்து மீள்விக்கப்பட்டது