பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக காட்டுக்கு ஒரு வேடன் அடிக்கடி வருவான். மரத்தின் அருகே மானின் அடிச்சுவடு தெரிந்தால் போதும், உடனே அவன் மரத்தின்மீது பரண் அமைப்பான். வெளியே தெரியாமல் இல் தழைகளால் மூடி மறைத்தபடி பரணில் காத்திருப்பான். ஏதேனும் ஒரு மான் அருகிலே வந்தால், ஈட்டியை அதன் மேல் எறிந்து அதைக் கீழே வீழ்த்துவான். இப்படி அடித்துக் கொன்ற மிருகங்களின் மாமிசத்தையும் தோலையும் விற்று, அவன் பிழைப்பு நடத்தி வந்தான். - ஒரு நாள் ரோகந்த ஒரு மாமரத்தைக் கண்டது. அதில் தணிவாக இருந்த கிளைகளில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. இளம் வயது மான் அல்லவா? ஆசை தீர, பசி தீர பல மாம் பழங்களைத் தின்றது. அடுத்த நாளும் அங்கே வரவேண்டும் என நினைத்துத் திரும்பியது. சற்று நேரத்தில் அவ்வழியாக வேடன் வந்தான். புதிதாக ஒரு மான் வந்து போன அடையாளத்தைக் கண்டான். உடனே மரத்தின் மீது ஒரு பரண் கட்டிவிட்டு வீட்டுக்குப் போனன், மறு நாள் அதிகாலையில் மரத்திலே ஏறிப் பரணில் ளிந்துகொண்டான். கையிலே ஈட்டி தயாராக இருந்தது. நடுநேரம் காத்திருந்தான். மான் வரவில்லை. திடீரென்று அவன் முகம் மலர்ந்தது. ஒரு சிறு மான் மரத்தை நோக்கி வருவதைக் கண்டான். அதுதான் ரோகந்தா.