பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுந்துாரம் பாய்ந்து ஓடும். உலகிலேயே வேகமாக ஒடும மிருகங்களில் இதுவும் ஒன்று. முதலில், உயர் எழும்பி எழும்பிச் செங்குத்தாகக் குதிக்கும். பிறகு, சில மீட்டர் தூரம் தாவித் தாவி ஒடும். அப்புறம் நாலு கால் பாய்ச்சல்தான் மான் கூட்டம் விரைந்து ஒடும்போது பார்க்கவேண்டுமே. அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல இருக்கும் அந்த அழகான காட்சி! - சிறுவயதிலேயே ரோகந்தா எவ்வளவு புத்திசாலியாக இருந்தது தெரியுமா? ஒரு நிகழ்ச்சியைக் கேளுங்கள். காட்டிலுள்ள மாமரங்களில், சில காலங்களில் ஏராளமாகப் பழங்கள் பழுத்திருக்கும். அப்போது பறவைகள் கொத்தித் தள்ளிய பழங்கள் மரத்தடியில் சிதறிக் கிடக்கும். சில மரங், களில் கிளைகள் தாழ்வாக இருக்கும். அவற்றிலுள்ள பழங்களே மான்கள் பின்கால்களை ஊன்றி நின்றபடி எம்பி எம்பிக் கடித்துச் சுவைக்கும்.