பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானின் காலடியை வேடன் கண்டுபிடித்தானே, அது போலவே வேடனின் காலடியையும் புத்திசாலியான மான் கண்டுபிடித்துவிட்டது. வேடன் எவ்வளவோ முன் ஜாக் கிரதையாக இருந்தும், ஓரிரு காலடிகளே மறைக்காமல் இருந்துவிட்டான். ரோகந்தா நிமிர்ந்து பார்த்தது. மரக்கிளே கள் முன்புபோல் இல்லை. ஏதோ மாறுபாடு தெரிந்தது. சரி, அபாயம் காத்திருக்கிதது” என்று ரோகந்தா நினைத்தது. மரத்தை நெருங்காமல், சிறிது தூரம் தள்ளியே நின்றது. வேடனுக்குப் பரபரப்பு. ரோகந்தா அருகே வரும்வரை காத்திருக்க அவனுக்குப் பொறுமை இல்லை. அது அசையா மல் நிற்கவே, அவன் ஒரு மாம்பழத்தைப் பறித்துத் தரையிலே எறிந்தான். அது கீழே விழுந்து மெல்ல மானே நோக்கி உருண்டு சென்றது. அதைப் பார்த்ததும், மேலும் பழங்களைத் தின்னவேண்டும் என்ற ஆசையில் மான் நெருங்கிவரும் என அவன் எதிர்பார்த்தான். - மாம்பழம் உருண்டு வந்ததும், அதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது என்பதை மான் உணர்ந்துகொண்டது. மரக் கிளைகளை ஊடுருவிப் பார்த்தது. முதலில் ஒன்றும் புதிதாகத் தெரியவில்லே. ஆனால், நல்ல காலமாக, அப்போது இளங் காற்று வீசவே, கிளைகள் அசைந்தன. இலைகள் சலசலத்தன. சில விநாடிகளில் வேடனைப் பார்த்துவிட்டது ரோகந்தா. வேடனைப் பார்த்ததாக ரோகந்தா காட்டிக்கொள்ள வில்லே. உரத்த குரலில் மரத்தைப் பார்த்து, மாமரத் தண்ணே, நீ எனக்குப் பழம் தரவேண்டும் என்ருல், இத்தனை நாளும் நேராகத் தரையில்தானே கொட்டுவாய்? ஆல்ை, இன்று மட்டும் கல்லே எறிவதுபோல் என்னை