பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோகந்தாவுக்கு மற்றோர் ஆபத்து வந்தது. ஆனால், அதி" லிருந்து இவ்வளவு எளிதாகத் தப்பவில்லை. காட்டிலே அது. சுற்றிவந்தபோது, ஆதிவாசி ஒருவன் வைத்திருந்த கண்ணி ஒன்றில் அகப்பட்டுக் கொண்டது. ஒரு கணம் அது பெரும் பீதி அடைந்தது. மறுகணம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'தப்பிக்க வழி என்ன?' என்று அமைதியாகச் சிந் தித்தது. அதற்கு ஒரு யோசனை தோன்றியது. கண்ணியிலி ருந்து தப்பிக்கத் திமிறினால், முடிச்சு இன்னும் இறுக்கமாகும். பிறகு, மேலும் தொல்லைதான். ஆகவே, அது தரையைத் தன் கால்களால் பிராண்டியது. புல்லையும் மண்ணையும் சுற்றி 'லும் இறைத்தது. பிறகு, கீழே ஒரு பக்கமாகச். சாய்ந்து படுத்துக் கால்களை விரைப்பாக நீட்டியது. தலையைப் பக்க. வாட்டிலே தொய்யவிட்டுக் கண்களை மூடிக்கொண்டது. நாக்கை வெளியே நீட்டித் தொங்கவிட்டது. அதன் உடலெல் லாம் நனைந்து ஈரமாகியது. உடனே, ஈக்கள் அதை மொய்க் கத் தொடங்கின. அசையாமல் கிடந்த அதன் உடல்மீது சில காகங்களும் வந்து உட்கார்ந்தன. ரோகந்தா வெகுநேரம் அப்படியே கிடந்தது. பிற்பகலில் அந்த ஆதிவாசி வந்தான். தான் வைத்த கண்ணியில் ஏதா வது சிக்கியிருக்கிறதா என்று பார்த்தான். ஒரு மான் அகப் பட்டுக் கொண்டது என்பதைத் தூரத்திலிருந்தே பார்த்து . மகிழ்ந்தான், ஆனால் அருகே வந்ததும், அவனுக்குச் சிறிது ஏமாற்றமாக இருந்தது. அசையாத உடல்மீது காகங்கள் இருப்பதையும், ஈக்கள் மொய்ப்பதையும் அவன் பார்த்தான்.. தரையிலே புல்லும் மண்ணும் சிதறிக் கிடப்பதும் தெரிந்தது.