பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பாவம், இது அதிகாலையிலேயே சிக்கிக்கொண்டிருக்க வேண்டும். தப்புவதற்குப் படாத பாடு பட்டிருக்கிறது. கண்ணியிலுள்ள சுருக்கு கழுத்தை நன்ருக இறுக்கியதால் இறந்துபோய்விட்டது” என்று நினைத்தான். 'இப்போதே இது அழுக ஆரம்பித்துவிட்டது. வீட்டுக்கு எடுத்துப் போவ தற்குள் இன்னும் மோசமாகிவிடும். இதன் மாமிசத்தைத் தின்ன முடியாது. இங்கேயே இதை வெட்டித் துண்ட மாக்கி, கொஞ்சத்தைத் தின்றுவிட்டு, மீதியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம்’ என்ற எண்ணத்தில், சுருக்குகளே அவிழ்த்து, மானைத் தனியாக எடுத்தான். தரையிலே கிடத்தி விட்டு, தீ மூட்டுவதற்குச் சுள்ளி பொறுக்கச் சென்ருன். அவன் சிறிது தூரம் சென்ருனே இல்லையோ, ரோகந்தா திடீ ரென்று எழுந்தது. உடலே ஒரு குலுக்கு குலுக்கியது. அம்பைப்போல் பாய்ந்து, பறந்தோடிவிட்டது. வளர வளர ரோகந்தாவுக்கு இத்தகைய அனுபவங்கள் நிறைய ஏற்பட்டன. வாழ்க்கை இனிமையாக இருந்தாலும், அதில் ஆபத்துக்களும் அதிகம் உண்டு என்பதை உணர்ந் தது. ஆபத்துக்களைத் தனியாகச் சமாளிப்பது கடினம். நண் பர்கள் இருந்தால், ஒருவருக்கு ஒருவர் உதவலாம் அல்லவா? ரோகந்தா வாழ்ந்த சமவெளிக்குப் பக்கத்தில் ஒரு காடு இருந்தது. அங்கே உயரமான ஒரு மரத்தில் ஒரு மரங் கொத்தி கூடுகட்டி வசித்து வந்தது. அதன் அருகில் இருந்த சிறிய குட்டையில் ஓர் ஆமை வாழ்ந்தது. அந்தக் குட் டைக்குச் சிறிது தூரத்தில் ஓர் ஏரி இருந்தது.