பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமும் மாலயில் மான்கூட்டம் ஆந்து ஏரியில்தரின் நீர் அருந்துவது வழக்கம். ஆல்ை, ர்ோகந்தா மட்டும் குட் ட்ைக்கே வரும். ஆமையையும், மரங்கொத்தியையும் சந் தித்து அரட்டை அடிப்பதற்கு அதுதானே ஏற்ற இடம்: மூன்றும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டன. ஒரு நாள், அவ்வழியாக ஒரு வேடன் சென்றன். அவன் குட்டையின் அருகே ஒரு மானின் காலடிச் சுவட்டைக் கண்டான். சில வாரங்களுக்கு முன்பு அவன் அந்தப் பக்கம் வந்தபோது எந்த ஒரு மிருகத்தின் காலடியையும் பார்க்க வில்லை. "ஓகோ! இப்போது இங்கே வழக்கமாக ஒரு மான் வருகிறது போலிருக்கிறது. அதைப் பிடிக்கலாம்?’ என்ற எண்ணத்தில் தோலால் ஆன ஒரு சுருக்கு வலேயை அங்கே வைத்துவிட்டுச் சென்ருன் அப்போது குட்டையில் அடி மட்டத்தில் இருந்த ஆமை இதைக் கவனிக்கவில்லை. பொழுது சாயும் நேரத்தில், வழக்கம்போல் குட்டைக்குச் சென்ற ரோகந்தா வலேயில் அகப்பட்டுக்கொண்டது. உடனே துடிதுடித்து அன்றியது. அதன் அலறலைக் கேட்டதும், ஆமை கரையேறி வெளிவந்தது. மரங்கெர்த்தி கீழே ப்றந்துவ்ந்து அருகே இருந்த ஒரு கல்லில் அமர்ந்தது.