பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரங்கொத்தி ஆமையைப் பார்த்து, 'அண்ணே, இந்தத் தோல் வலையிலுள்ள வார்கள் உறுதியானவை. அவற்றை விட மிகவும் உறுதியானவை உன்னுடைய பற்கள். ஆகை யால் நீதான் இந்த வலையைக் கடித்து அறுக்கவேண்டும். தோல்வார்கள் உறுதியாக இருப்பதால், நீண்ட நேரம் ஆகலாம். ஒரு நாள்கூட ஆகலாம். இதற்குள் நான் போய், உன் வேலே முடியும் வரை வேடன் இங்கே வராதபடி பார்த் துக்கொள்கிறேன்’ என்றது. சிறிது தூரத்தில் காட்டின் ஒரத்தில் இருந்தது வேடனின் குடிசை. அங்கே பறந்துசென்றது, மரங்கொத்தி. குடிசை யின் எதிரே இருந்த மரத்தில் இரவு முழுவதும் காத்துக்கொண் டிருந்தது. விடிந்ததோ இல்லேயோ, வேடன் கையிலே ஒரு கத்தியுடன் வெளியில் வந்தான். மரங்கொத்தி அவனேப் பார்த் ததும், அவன் முகத்திற்கு எதிரே பயங்கரமாகக் கத்திக் கொண்டே பறந்தது. தன் சிறகால் அவனைத் தாக்கியது. அவன் மீது எச்சமிட்டு அசிங்கப்படுத்தியது. வேடனுக்குச் சகுனங்களில் நம்பிக்கை உண்டு. காலேயில் வேலைக்குப் புறப்படும்போது பறவையின் எச்சம் உடம்பிலே பட்டதால் கெட்ட சகுனம் என்று நினைத்தான். ஆகையால், 'காலேயில் வேண்டாம். பகலில் போகலாம்” என்று வீட்டி லேயே இருந்துவிட்டான். பிற்பகல் வெகுநேரம் சென்ற பிறகு, மறுபடியும் வெளியே செல்ல நினேத்தான். சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். மரங்கொத்தி அந்த இடத்தை விட்டுப் போகவே இல்லை. அதன் தொல்லையிலிருந்து தப்ப, கொல்லப்புற வழியாகப் போகலாம் என்று வேடன் எண்ணினன். ஆளுல், கெட்டிக் கார மரங்கொத்தியோ அவன் எண்ணத்தை ஊகித்து அறிந்து கொண்டது. ஆகையால், அவன் .ெ கால் லே ப் புற மாக வந்தானே இல்லையோ, அது அவனை நோக்கிப் பறந்து சென்று, சிறகுகளால் அவன் முகத்தில் அறைந்து, அலகு களால் கொத்தியது. மறுபடியும் அவன் மீது எச்சமிட்டது. இந்தத் தடவை வேடனுக்கு அபாரமான கோபம். அவன்