பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவையை அடிக்கப் பார்த்தான்; அதைப் பிடித்து அதன் கழுத்தை நெரிக்கவேண்டும் என்று துடித்தான். இப்போது வேடனுடன் சண்டைபோடுவது ஆபத்து என்பதை மரங் கெர்த்தி உணர்ந்தது. ஆகையால், அது பறந்து சென்று ஒரு மரத்திலே அமர்ந்தது. வேடன் என்ன செய்கிருன் என்று கவனித்தது. மிகவும் கோபமாயிருந்த வேடன், நல்ல சகுன மாயிருந்தாலும் சரி, கெட்ட சகுனமாயிருந்தாலும் சரி, குட் டையை நோக்கிச் செல்வது என்று முடிவுசெய்தான். ஆத்திரத்துடன் அவன் வேகமாக நடந்து செல்வதைக் கண்ட மரங்கொத்தி, ‘இனியும் இங்கு இருப்பதில் பயனில்லை. நம் நண்பர்களே எச்சரிக்கவேண்டும்’ என்று எண்ணி மிக வேகமாகக் குட்டையை நோக்கிப் பறந்து சென்றது. தோல் வலேயின் வார்களே ஒவ்வொன்ருக அறுத்துக் கொண்டிருந்தது ஆமை. இன்னும் ஒரே ஒரு வார்தான் மீதம் இருந்தது. வார் உறுதியாக இருந்ததால் ஆமைக்கு வாய் வலித்தது. பற்கள் விழுந்துவிடுமோ என்ற அச்சம்கூட அதற்கு ஏற்பட்டது. வாய் முழுவதும் இரத்தமாகிவிட்டது. மரங்கொத்தி பறந்து வந்து, வேடன் வருவதை அறிவித்த தும், ஆமை தன் பல்வலியையோ, வாய் வலியையோ பொருட் படுத்தவில்லை. மேலும் தீவிரமாக வாரைக் கடித்து இழுத்த்து. கத்தியும் கையுமாக வேடன் ஓடிவருவதைக் கண்ட ரோகந்தா, தன் பலத்தையெல்லாம் காட்டித் திமிறியது. வேடன் பத்தடி தூரத்தில் வரும்போது வார் பட்டென்று