பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாறையின் மேல் நேராகக் குதிக்கவில்லை. சற்று முன்பே நீரில் விழுந்துவிட்டது. நல்ல காலம்; விரைந்து ஓடும் நீர் அதை அடித்துக்கொண்டு போவதற்கு முன்பே, அது தட்டுத் தடுமாறி நீந்தி, பாறையின் ஒரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. பிறகு, மெல்ல மெல்லப் பாறையின் மீது ஏறியது. அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து க்ளைப்பாறியது. நீர் சில்லிட்டுப் போயிருந்ததால், அதன் உடல் முழுவதும் தெப்ப மாக நனேந்திருந்தது. . ‘அப்பப்பா. இனிமேல் இப்படிப் பேராசையோடு தின்ன மாட்டேன். பசி தீரும் வர்ைதான் சாப்பிடுவேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. மாலை வெய்யிலில் உடலில் இருந்த ஈரம் மறைந்தது. சீராக மூச்சுவிடவும் முடிந்தது. சிறிது நேரத்தில் அது பாறையி