பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுந்தபடி கரையிலே தள்ளி நின்றுகொண்டு, நாணலின் ஒரு முனையைக் குட்டைக்குள் விட்டது. மறு முனையை வாயில் வைத்து உறிஞ்சியது. தண்ணீர் மேலே வந்து, வரண்டி ருந்த தொண்டைக்குள் சென்றது. நந்திரியாவின் தாகம் தீர்ந்தது. உடனே அது மற்றக் குரங்குகளையும், இதேபோல் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லியது. சில குட்டிக் குரங்குகள் முதலேக்கு அழகு காட்டின. கோபத்துடன் அவற்றைப் பிடிக்க நினைத்தது. ஆலுைம், அது தன் பருத்த உடலேத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நகர்ந்து வருவதற்குள், குரங்குகள் நீரைக் குடித்துவிட்டு மரத்திலே ஏறிக்கொள்ளும். சிற்சில சமயங்களில், குரங்குகள் வைத்திருக்கும் நானலே, முதலே கோபமாகக் கடித்து இழுக் கும். அதனுல் என்ன? குரங்குகள் எதிர் கரைக்கு ஒடிப் போய்ப் புதிய நாணலே எடுத்து நீர் உறிஞ்சும். முட்டாள் முதலேயோ குரங்குகளைப் பிடிக்கும் ஆத்திரத்தில் இப்படியும் அப்படியும் எழும்பிக் குதிக்கும். ஆனாலும், சிறிது நேரத்திலே களைத்துப் போகும். மரக்கட்டை போல் சாய்ந்தபடி கிடந்த வாறே குரங்குகளைக் கோபமாகப் பார்க்கும். இப்படி இரண்டு மாதங்கள் சென்றன. பிறகு மழைக் காலம் வந்துவிட்டது. ஒடையில் நீர் நிறைய வந்தது. கரை யிலேயே குடிக்க நீர் கிடைத்தபிறகு, குரங்குகள் முதலைக் குட்டைக்கு ஏன் போகவேண்டும்? பெரும்பாலான மாமரங்கள் தீவின் நடுவே - அதாவது ஆடைக்கரையிலிருந்து உள்பக்கம் தள்ளியே இருந்தன. ஒரே