பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும்வரை - இந்தக் குட்டையை விட்டால் வேறு எங்குமே தண்ணிர் கிடையாது.” என்ன செய்வது என்று தெரியாமல் நந்திரியா வெகு நேரம் யோசித்தது. இதற்குள் குரங்குகள் தொண்டை வரண்டு துடிதுடித்துக்கொண்டிருந்தன. திடீரென்று நந்திரி யாவுக்கு ஒர் அருமையான யோசனை தோன்றியது. ‘எல்லாரும் முதலைக்கு எட்டாத தூரத்தில் கரையிலே தள்ளி நில்லுங்கள். ஒவ்வொருவரும் நீளமான ஒரு நானலைப் பிடுங்கி வைத்துக்கொள்ளுங்கள்? என்று கட்டளையிட்டது. அதுவும் ஒரு நாணலைப் பிடுங்கியது. அதன் மென்மையான மேல் பகுதியைக் கடித்து எறிந்துவிட்டு அதை வாயில் வைத்து ஊதியது. நடுவிலே ஒரு கணு இருந்ததால் அது சரியாக, ஊத வரவில்லை. வேருெரு நாணலைப் பிடுங்கியது. அதிலே கணு மிகவும் தள்ளி அடியிலே இருந்தது. அந்தக் கணுவை ஒடித்துவிட்டு ஊதிப் பார்த்தது. தடையில்லாமல் காற்று வெளியில் வந்தது. நந்திரியா முதலே ஒளிந்திருந்த இடத்தை விட்டுச் சிறிது தூரம் சென்றது. நாணலின் நீளத்திற்குத்