பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிருேம். உலகத்தி லுள்ள கோடிக்கணக்கான மக்கள் அவ்ரை அன்பின் வடிவ மாகவும், சிறந்த ஞானகுருவாகவும் போற்றி வருகிறர்கள். புத்தர் என்பது ஒரு பெயரல்ல; அந்தச் சொல்லுக்கு 'ஒளி பெற்றவர்’ என்று பொருள், அதாவது, வாழ்வு என் ருல் என்ன என்பதை உணர்ந்தவர் ; மனிதர்கள் எப்படி வாழ்ந்தால் அமைதியும் ஆனந்தமும் அடையமுடியும் என்று ஆழ்ந்து சிந்திப்பவர். புத்தரின் முதல் பெயர் சித்தார்த்தர். அவர் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் இளவரசர். ஒரு நாள், நள்ளிரவில், அவர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டார். நாடெங்கும் பல ஆண்டுகள் அலேந்தார். ஏன்? வீட்டின் மீது அவருக்கு வெறுப்பா? அல்லது பெற்ருேர், மனைவி, குழந்தையின் மீது வெறுப்பா? இல்லை. தம்மைச்