பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் தாண்டிய தூரம் எவ்வளவு என்பதை உத்தேசமாகக் கணக்கிட்டது. அந்த அளவுக்கு ஒரு மூங்கிலத் தேடி எடுத் தது. பருமன் இல்லாது போலுைம் உறுதியாக இருந்தது, அந்த மூங்கில். அங்கே கிடைத்த மூங்கிலில் நீளமானது அதுதான்! தான் இறங்கி வந்த அதே மரத்தில் அந்த மூங்கி லுடன் ஏறியது. மூங்கிலின் ஒரு முனையை ஒடைப் பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு கிளேயில் கெட்டியாகக் கட்டியது. பிறகு, வெகு ஜாக்கிரதையாக மூங்கிலில் தொத்தியது. மூங்கில் வழுவழுப்பாக இருந்ததால், அதில் தொத்துவது சிரமமாக இருந்தது. எப்படியோ சமாளித்து, மூங்கிலின் நுனியை அடைந்தது. மூங்கிலின் நுனிப் பாகத்தைத் தன் இடுப்பில் நன்ருகக் கட்டிக்கொண்டது. பிறகு, மூங்கிலே ஊஞ்சல்போல முன்னும் பின்னும் ஆட்டியது. ஒடும் நீருக்கு மேல் எதிர்க் கரையை நோக்கி மூங்கில் ஆடியது வேகம் அதிகமாக ஆக, மூங்கிலின் நுனி தீவுக்கரையிலிருந்த பட்டமரக் கிளையின் அருகே வந்தது. கரணம் தப்பில்ை மரணம்தான். வேகமாக ஆடும் மூங்கிலிலிருந்து எந்தக் கணமும் நந்திரியா தவறிக் கீழே விழலாம். விழுந்தால் வேகமாக ஓடும் நீரிர் மூழ்க வேண்டியதுதான். அந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல், ஊஞ்சல் ஆடும் மூங்கில், பட்ட மரக்கிளைக்கு அருகே வந்த் தும், சரேலென்று எட்டிய பிடித்துக்கொண்டது