பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழே கூடியிருந்த குரங்குகளே மெல்ல அழைத்தது. ஒவ் வொருவராக மரத்திலே ஏறி, பாலத்தைக் கடந்து, எதிர் கரைக்குச் செல்லுங்கள்?’ என்றது. குரங்குகள் ஏராளமாக இருந்தன. அவை தன் மீது நடக்கும்போது நந்திரியாவுக்கு உடல் வலித்தது. சற்று நேரத்தில் வலி அதிகமாயிற்று. இப்போது அது என்ன, குட்டிக் குரங்கா? அதற்கும் வயதாகி விட்டதே! அதன் இதயமும் பலவீனமாக இருந்தது. திடீ ரென்று அதன் நெஞ்சுக்கு அருகிலே சுரீரென்று வலித்தது. இனி, ஒரே ஒரு குரங்கு தன் மீது நடந்தாலும் போதும்; இறந்து விடுவோம் என்று தோன்றியது. ஆளுல், இன்னும் ஒரு தாய்க்குரங்கு மிச்சமிருந்தது. அது தனியாக இல்லை; தன் இரண்டு குட்டிகளுடன் இருந்தது குட்டிகள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தன. நந்திரியா தன் வலியை வெளி யிலே காட்டிக்கொள்ளவில்லை. பல்லேக் கடித்துக்கொண்டு, அவற்றையும் அக்கரைக்கு விரைந்து போகச் சொன்னது.

தாய்க்குரங்கு குட்டிகளுடன் பத்திரமாக எதிர்கரையை அடைந்ததோ இல்லையோ, ஆபத்து வந்துவிட்டது. எதிர் கரையில் மரத்துடன் மூங்கிலேச் சேர்த்துக் கட்டியிருந்த முடிச்சு குரங்குகளின் கனத்தால் கொஞ்சம் கொஞ்சமாகத் த்ளர்ந்துகொண்டே வந்து, திடீரென்று அவிழ்ந்து விட்டது. இந்த அதிர்ச்சியில் ஏற்கெனவே களைத்துப் போயிருந்த தந்திரியாவின் பிடி தளர்ந்தது. தொப்டென்று அது தீவின் கரையிலே, தரையில் விழுந்தது.

இது நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பே அங்கு யாருக்கும் தெரியாமல் அரசன் வந்திருந்தான். நடந்தவற்றை யெல்லாம் அவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். மங்கிய திலவொளியில், குரங்குகள் தீவை விட்டுப்போவதை அவன் திருப்தியாகப் பார்த்தான். அவன் விரும்பியதும் அதுதானே!

தொப்பென்று கீழே விழுந்த நந்திரியாவையும், அதன் இடுப்பிலே கட்டியிருந்த மூங்கிலேயும் பார்த்த பிற்குத்ான் உண்மையில் என்ன நடந்தது என்பது அரசனுக்குத் தெளி வாகத் தெரிந்தது. உடனே கீழே விழுந்த நந்திரியாவை நோக்கி அவன் ஒடிஞன். அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முயன்ருன். ஆனல், அப்போது அது இறக்கும் தறு வாயில் இருந்தது.

'ஆகா! என்ணே உன் பெருந்தன்மை மனிதர்களிலே கூட, பிறருக்காகத் தன்னையே தியாகம் செய்துகொண்டவரை தான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லே. உனக்கு ஏதேனும் கடைசி விருப்பம் இருந்தால் சொல்; அதை நிறைவேற்று கிறேன்’ என்ருன்,