பக்கம்:ரோஜாச் செடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ‘சரி, இனிமேல் நாம் இங்கிருந்தால் நமக்கும் இதே கதிதான் ! நாயைத் தீர்த்துக் கட்டிவிட்டு, சிங்கம் நம்மிடத்திலே வந்துவிடும். சிங்கத்தைப் போலவே வேட்டை நாய்க்கும் கோரமான பற்கள் இருக்கின்றன; கூர்மையான நகங்கள் இருக்கின்றன. அப்படி யிருந்தும், அதனாலேயே, சமாளிக்க முடியவில்லையே! நம்மால் எங்கே முடியப் போகிறது? சிங்கத்தின் உருவத்தையும், வேட்டை நாயின் உருவத்தையும் பார்க்கும்போது எனக்குப் பயம் ஏற்படவில்லை. ஆனால் அவைகளின் துஷ்ட குணங்களைப் பார்க்கும் போதுதான் ஒரே பயமாக இருக்கிறது. ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனேனே. இப்போது என்ன செய்வது?...சிங்கம் சண்டை மும்முரத்தில் இருக்கிறது ஆகையால், இந்த நிமிஷமே நாம் இந்த இடத்தை விட்டு ஓடிவிடவேண்டும். ஆம், ஒடுவதற்காகத்தானே கடவுள் எனக்கு நீளமான கால்களைக் கொடுத்திருக்கிறார்! இதோ ஒடுகிறேன். என்று கூறிக்கொண்டே ஓட்ட ஒட்டமாக ஒட ஆரம்பித்தது குட்டி மான்.

அம்மா மானைப் பார்த்த பிறகுதான் குட்டி மானின் ஒட்டம் நின்றது. குட்டி மானைப் பார்த்த பிறகுதான் அம்மா மானின் கவலை தீர்ந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/28&oldid=482543" இலிருந்து மீள்விக்கப்பட்டது