பக்கம்:ரோஜாச் செடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேட்டை நாய்க்குத் தப்ப வழியில்லே. அதனால், அது சிங்கத்தை எதிர்த்துச் சண்டைபோட ஆரம்பித்தது. ஒளிந்திருந்த மான் குட்டி சிங்கத்தையும் வேட்டை நாயையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தது. இரண்டும் ஒன்றை ஒன்று பற்களால் கடித்தன; நகங்களால் கீறின, ‘உர்ர். . உர்ர்’ ‘வள்...வள் என்று சத்தம் போட்டன. சிறிது நேரத்தில் இரண்டுக்கும் உடம்பெல்லாம் காயம் தரையெல்லாம் இரத்தம்!

நேரம் ஆகஆக வேட்டை நாய் ஒய்ந்து விட்டது. சிங்கம் சளைக்கவில்லை. வீராவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்டை நாயின் ஆயுள் முடிந்துவிடும் என்று குட்டி மானுக்குத் தெரிந்து விட்டது. உடனேயே, அதன் உடல் நடுங்கியது: உரோமம் சிலிர்த்தது. பயம் மனத்திலே புகுந்துகொண்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/27&oldid=482542" இலிருந்து மீள்விக்கப்பட்டது