பக்கம்:ரோஜாச் செடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ரோஜாச் செடி

பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஒர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம் ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டேயிருக்கும்.

அந்தச் சங்கத்தார் வருஷத்துக்கு ஒரு முறை புஷ்பக் காட்சி நடத்துவார்கள். அந்தக் காட்சியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்வதென்றால், சும்மா வந்து காட்சியைப் பார்த்துவிட்டுப் போவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொட்டியில் அவரவர் வளர்த்த புஷ்பச் செடிகளைக் கொண்டுவந்து, காட்சியில் வைப்பார்கள். பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதில் கலந்து கொள்ளலாம்.

காட்சி நடக்கும் தினத்தன்று காலை 6 மணிக்குள் செடிகளைக் கொண்டு வந்து வைத்துவிடவேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதை வளர்த்த பையன் அல்லது பெண்ணின் பெயர், வயது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/5&oldid=482471" இலிருந்து மீள்விக்கப்பட்டது