பக்கம்:ரோஜாச் செடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டு விலாசம் முதலியவற்றை அட்டையில் எழுதிக் கட்டி வைக்க வேண்டும். மிகவும் நன்றாக இருக்கும் செடிக்குப் பரிசு கொடுப்பார்கள். பரிசு ஐம்பது ரூபாய்.

இந்தக் காட்சியைப் பார்த்துப் பரிசு கொடுப்பதற்குக் கல்வி அதிகாரிகளும் பெரிய தலைவர்களும் வருவார்கள். அந்த வருஷம் கல்வி மந்திரியே வர ஒப்புக்கொண்டுவிட்டாராம். ஆகையால், மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் பாரதி சிறுவர் சங்கத்தார்.

மிராசுதார் முருகேச பிள்ளை என்றால் பூம்புதூரில் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் பெரிய பணக்காரர். அவருடைய மகள் மீரா ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.

புஷ்பக் காட்சி நடப்பதற்கு முதல் நாள் முழுவதும் அவளுக்கு ஒரே கவலை. வசந்தா கனகாம்பரச் செடி வளர்த்திருக்கிறாள். மல்லிகா சூரியகாந்தி வளர்த்திருக்கிறாள். ரேவதி ரோஜா வளர்த்திருக்கிறாள். ஆனால், நான் மட்டும் எதுவுமே வளர்க்கவில்லை, கல்வி மந்திரியே இந்த வருஷம் வரப்போகிறாராம் உம் என்ன செய்வது? நாளை விடிந்தால் புஷ்பக்காட்சி! என்று ஏங்கிக்கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கே வந்தாள் மீராவின் சிநேகிதி கமலா. அவள் மீராவிடம், “ஏன் மீரா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“இந்த வருஷம் புஷ்பக் காட்சிக்குக் கல்வி மந்திரி வருகிறாராம். அவர் கையாலே ஐம்பது ருபாய் பரிசு வாங்க எனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/6&oldid=482472" இலிருந்து மீள்விக்கப்பட்டது