174
கலைஞர் மு. கருணாநிதி
அவசரமாகத் தங்களைத் தனியே சந்திக்க வேண்டுமாம்! அது முடியுமா என்று தங்களைக் கேட்டுப் போகவே வந்தேன்."
"என்னை எதற்காகச் சந்திக்க வேண்டுமாம்?"
"படையெடுப்பைப் பற்றித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்; தனிமையில் சந்தித்துப் பேச வேண்டுமென்று கூறினார்."
"ஓ! பேசலாமே - நான் தயாராயிருக்கிறேன். ஒற்றர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்."
"எங்கே அவரை அழைத்து வருவது?"
"இங்கேயே அழைத்து வரலாம். உங்களை மெய்க்காப்பாளன் வரவேற்பான். அதன் பிறகு நான் தங்கியிருக்கும் தனியிடத்துக்கு ஒற்றர் அழைத்து வரப்படுவார்."
"அப்படியானால் இன்றிரவே அழைத்துவர முயல்கிறேன். இல்லையேல் நாளைக்கு...?"
"தாராளமாக! இதோ! இப்போதே மெய்க்காப்பாளனுக்கும் அறிவித்து விடுகிறேன்" எனக் கூறியவாறு கரிகாலன் கையொலி செய்ய, மெய்க்காப்பாளன் எதிர் வந்து நின்று வணங்கினான்.
"இன்றோ, நாளையோ -முத்துவுடன் இன்னொரு ஆள் வருவார். என்னிடம் அழைத்து வர வேண்டும்" என்று அவனுக்கு உத்தரவிட்டு விட்டு முத்துநகையைப் பார்த்து "உன்னை எப்படிப் புகழ்வது என்றே தெரியவில்லை. திறமையும் பயிற்சியும் பெற்ற தலைசிறந்த ஒற்றர்களுக்குக் கூட உன் ஆற்றல் வருமா என்பது சந்தேகம்" என்று பாராட்டினான் பூம்புகார் மன்னன். அரசரின் புன்னகையைப் பரிசாகப் பெற்று பெருமிதங் கொண்ட முத்துநகை, விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.
வீரபாண்டியை அழைத்துவந்து கரிகாலரிடம் சந்திக்க வைப்பதற்காக உற்சாகத்துடன் கிளம்பினாள். தன்னை அறியாமல் ஒரு பெரும் சதிக்குத் தான் உடந்தையாகி விட்டோம் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் மாளிகைத் தாழ்வாரத்தைக் கடந்து வெளியேறும்போது எதிரே புலவர் காரிக்கண்ணனார் வேகமாக வந்து கொண்டிருந்தார். சென்றவள் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் கலங்கிற்று.
"அப்பா!" என்று கூவிட இருந்தாள். சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். புலவருக்குத் தன்னைக் கடந்து செல்வது தன் மகள்தான் என்று தெரிந்திருந்தால், "அம்மா! முத்துநகை! என் கண்ணே!" என்று ஓலமிட்டுப் புலம்பி அழுது துடித்திருப்பார்; துவண்டிருப்பார். சற்று நேரம்