உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

17


நூலின் முதற்படியினைப் பெற்றுக்கொண்டு கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆற்றிய 100 இங்கே நீதிபதி திரு. அனந்தநாராயணன் அவர்கள் வெளியிட்ட இந்த ரோமாபுரிப் பாண்டியன்' என்கிற நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள் வதிலே நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னால் பேசிய நீதிபதி அவர்கள் எவ்வளவு தெளிவாக இந்த நூலைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ அவ்வளவும் சொல்லியிருக்கிறார்கள். 'தீர்ப்பு'க் குப் பின்னாலே வாதம் என்பது நியாயமில்லாததொன்றாகும். அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இங்கே இரு தரப்பு வக்கீல்களுடைய ஆர்குமெண்ட்டையும் அவர்களே செய்து தீர்ப்பையும் அவர்களே வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் சொன்னதுதான் முற்றும் முடிந்த உண்மையான மதிப்பீடாகும். கலைஞர் கருணாநிதி அவர்கள் சரித்திர நாவல் எழுதுவதிலே நீண்ட நாட்களாகவே ஆர்வம் காட்டியவர்கள். அவருக்கும், அவரைப் போன்ற தமிழார்வம் உள்ளவர்களுக்கும், சரித்திரத்தில் எங்காவது ஒரு தடயம்- இன்ன காலத்தில் இன்னார் வாழ்ந்தார் என்று கிடைத்தாலே போதும் - அவர்களைப் பின் தொடர்ந்து போய், முடியுமானால் ரோமாபுரி வரைக்கும் போய், அந்த வரலாற்றுக்குப் புதிய மெருகைக் கொடுத்துவிட - அந்த ஆர்வம் அவர்களை உந்தித் தள்ளுகின்றது. அதிலேயும், எந்த ஒரு எழுத்தாளனுக்கும் மிகவும் இன்றியமையாதது ஒன்றைப் பார்க்கும்போது இன்னொன்று தோன்றுவதாகும். அது பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தோன்றாததால்தான் அவர்களு டைய எழுத்துக்களை நாம் படிக்கும்போது அவர்களே முன்னால் நிற்கின்றார் களே தவிர அவர்களுடைய எழுத்து முன்னால் நிற்பதில்லை. ஆனால் இவரைப் பொறுத்தவரை ஒரு பொருளைக் காணும்போது, அவருக்கு வேறு பொருள் தோன்றுகிறது. ஒன்றைப் பார்க்கும்போது இன்னொன்று விரிவது என்பது ஒரு நல்ல கற்பனையாளனுக்கு உள்ள நியாயமாகும். அது இல்லையென்றால். பெண்ணைப் பார்க்கும் ஒருவன் கண்ணைக் கண் என்றுதான் சொல்லுவான். வாயை வாய் என்றுதான் சொல்லுவான். கண்ணைக் குவளை என்று சொல்ல ஒருவனுக்குத் தோன்றிற்று, வாயைக் கோவை என்று சொல்லத் தோன்றிற்று என்றால் ஒன்றை நோக்கி இன்னொன்று விரிகின்றது. அது சற்றுக் கற்பனையாக