உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கலைஞர் மு. கருணாநிதி


18 கலைஞர் மு. கருணாநிதி அதிகமாக விரிகின்றது. ஆகவே, ரோமாபுரிக்கும், நம்முடைய நாட்டுக்கும் இடையிலே உறவு இருந்தது என்ற ஒன்றை அடிப்படையாகக்கொண்டு, அதற்கு என்னென்ன வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமோ அவ்வளவையும் சேர்த்து ஒரு நல்ல பெரிய நாவலாகக் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். சரித்திர நவீனம் எழுதுவதிலே ஒரு கஷ்டம் உண்டு. எத்தனை கதாபாத்திரங் களை எடுத்துக் கொள்கிறோமோ அவர்கள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று அடிக்கடி ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் அடுத்தாற்போல் எழுதும்போது அது தலைகீழாகப் போய்விடும். நான் பாண்டிமாதேவி என்று ஒரு காவியம் எழுதத் தொடங்கினேன். அந்தக் காவியம் எழுதத் தொடங்கி 12 வருடம் ஆகின்றது. பாண்டிமாதேவி என்றுதான் அதற்குத் தலைப்பு. நான் பின்தொடர்ந்து போனது சேரமாதேவியை. அவள் இலங்கையில் இருக்கிறாள் இப்போது. அவளை எப்படித் திரும்பக் கொண்டு வருவது என்று தெரியாமல் 12 ஆண்டு காலமாக பாண்டிமாதேவி நடுத் தெருவிலே நின்றுகொண்டிருக்கிறாள். கதாபாத்திரங்களைக் கொண்டு செலுத் துகின்ற பாணி என்பது நினைவிலே நிறுத்தி வைத்துக் கொண்டு போக வேண் டும். ரோமாபுரிக்குப் பாண்டியன் போனான், ராணி இங்கே தமிழ்நாட்டிலே இருந்தாள் என்றால் இரண்டு பேருக்குமிடையே உள்ள சம்பவங்கள் ஞாபகத்தோடு வரையப்பட வேண்டும். ஆகவே முன்னாலே சொன்னது போன்ற பாத்திரங்களைப் பின்தொடரும்போது மிக ஜாக்கிரதை யாகப் பின் தொடர வேண்டும். அதிலும் பாத்திரப் படைப்பு, பாத்திரங்களுடைய குணங்கள் என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்பட வேண்டும். அதை ரோமாபுரிப் பாண்டியனிலும் கலைஞர் அவர்கள் மிக அழகாகக் கையாண்டு இருக்கிறார் கள். பொதுவாக மனிதனுக்கு ஒன்பது குணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனைப் பாத்திரமாகப் படைக்கும் போது அவனுக்கு ஒரு குணம்தான் இருக்கவேண்டும். அது போலவே எந்தச் சிறப்பான நாவல், நாடகங்களில் பார்த்தாலும் அந்த கேரக்டர் என்பது ஒன்றாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்களைப் படைப்பது என்பது, படைக்கின்ற போதே கதையின் உருவகமும், கண்ணிலே கிடைக்க வேண்டுமென்பதற்கு இந்த ரோமாபுரிப் பாண்டியனை ஏறக்குறைய நான் 200 பக்கங்கள் படித்தேன். அது ஒரு நல்ல சாட்சியாக அமைந்திருக்கிறது. தமிழிலே, தமிழ்நாட்டு மக்களுடைய வீர மரபுகள் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் அந்நாளிலே வாழ்ந்தது அகத்துறையும், புறத்துறையும் நமக்குக் காட்டுகின்றன. கலைஞர் கருணாநிதியின் இந்த நூல் அகம்புறம் இரண்டையும் முழுமை செய்கிறது. இந்த இரண்டு துறைகளுக்குள்ளே தான் அன்றைய தமிழனுடைய வாழ்நாள் முழுவதும் அடங்கியிருந்தது. ஆகவே, முழுவதும் இங்கே அவர்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவரும் என்னைப் போலவேதான் வாராவாரம் பத்திரிகையிலே கதை எழுதினார். இந்த வாரம்