உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

19


ரோமாபுரிப் பாண்டியன் 19 நிறுத்தும்போது கதாசிரியனுடைய - தொடர் கதையாசிரியனுடைய பலவீனம். ஜனங்களுடைய பலவீனம் என்று நினைத்துக் கொள்வது என்னவென்றால், நிறுத்துகிற இடத்தைப் பொறுத்துத்தான் அடுத்த வாரப் பத்திரிகையின் விற்பனை என்று. கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய தொடர்கதை விழுந்து எழாமல், நிமிர்ந்தே நின்றுகொண்டு இருப்பதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட சரித்திரத்தினுடைய பலமான பின்னணி என்பதுதான் மிக முக்கியமானதாகும். தமிழர்கள் ரோமாபுரிக்குப் போனதாக வரலாறு உண்டு. அப்படிப் போனவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்; எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கிறார். பூம்புகார் கடற்கரையிலே போய் நின்றுகொண்டு, இது முன்னாலே எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய அவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, பழங்கால வரலாற்றை அவர் படிக்கும்போது, அது எப்படி இருந்திருக்கும் - எப்படிப் போயிருப்பார்கள் என்று கற்பனை செய்து இருக்கக் கூடும். அதை அவர் பெருமையாகக் கருதியிருக்கக்கூடும். உண்மையிலேயே நான், சிங்கப்பூர் போயிருந்தபோது அதனுடைய வரலாற்றைப் படித்தேன். சிங்கப்பூர் எப்போது தோன்றியது என்று எழுதியிருக்கிறார்கள். இந்தோனேஷியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு தமிழ் மன்னன் அங்கிருந்து தனது விரோதியான வேறொரு தமிழ் மன்னனாலே துரத்தப்பட்டு அந்தத் தீவுக்கு வந்த போது அங்கே ஒரு சிங்கத்தைக் கண்டான். அதற்குச் சிங்கபுரம் என்று பெயரிட்டான். அதுதான் அந்தத் தீவின் முதல் வரலாறு என்று சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட வரலாற்றுக் குறிப்பில் இருக்கிறது என்பதனை நான் கண்டேன். அங்கு அது மட்டுமல்லாது, மலேசியாவில் இருக்கின்ற முஸ்லீம் வமிசாவழியினருக்கு முதன் முறையிலே முஸ்லீமாக மாறியவன் மலாக்காவை ஆண்டு வந்த ஒரு தமிழ் மன்னன் என்பது மலேசியாவினுடைய வரலாறு. ஆக, தமிழன் எங்கெங்கோ போய் விதை போட்டிருக்கிறான். ஆனால் அறுவடை செய்யாமல் திரும்பி வந்திருக்கிறான். அதுதான் நமக்கு அவன் செய்த துயரமாகும். ஆக, எங்கெங்கோ அவனுடைய வரலாறு இருக்கிறது. கம்போடியாவில் ஒரு பிரம்மாண்டமான கோயில். பிரம்மாவுக்கு வேறு எங்கேயும் கோயில் இல்லை. அங்கே இருக்கிறது. அதிலே இருக்கின்ற சித்திரங்களை எல்லாம் கொண்டு வந்து, மலேசியாவில் பிரிண்ட் செய்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாற்கடலைக் கடைந்தது, விஷம் வந்தது. அவ்வளவும் இருக்கிறது அங்கே! கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு அதனுடைய சுற்றளவு இருக்கிறது. அவ்வளவு பெரிய கோயில். அந்தக் கோயிலைக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டு ஸ்தபதிகள். அவர்கள்தான் கட்டிக்கொண்டி ருந்தார்கள் என்று கம்போடிய வரலாறு கூறுகின்றது. ஆனால் காலரா போன்ற