268
கலைஞர் மு. கருணாநிதி
268 கலைஞர் மு. கருணாநிதி அண்ணி நுழைந்துவிட்டாள்; உலக பந்தத்திலிருந்தும் விடுபட்டு விட்டாள்! சோழ நாட்டுக் கைதிகளின் உயிரை விளையாட்டுப் பொருளாகக் கருதவேண்டாம் என்று தாமரை தன் அண்ணனிடம் மன்றாடி இருக்கிறாள். மிருகத்தனமாக வாழப் பழகி விட்ட இருங்கோவேளின் நெஞ்சத்திலிருந்து மனிதாபிமானம் மறைந்துவிட்டதா என்றும் சந்தேகித்திருக்கிறாள். ஆனால் இனித் தன் அண்ணியின் உயிருக்கு அவள் யாரிடம் மன்றாட முடியும்? அந்தக் குகையில் பரவியிருந்த இருளையும் மீறிக் கொண்டு அவள் கண்கள் உருண்டன. தட்டுத் தடுமாறி விழுந்து விடப் போகிறோமோ என்ற பயத்துடன் சுவரைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவரிலே செருகப்பட்டிருந்த தீவட்டிகள் கூட நன்றாக எரியவில்லை. தமது அரசியின் மறைவு குறித்து அவைகளும் அழுது கொண்டிருக்கின்றனவோ எனத் தாமரை நினைத் தாள். நடந்தாள்; அந்தத் தீவட்டிகளில் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு செழியனைத் தேடிக் கண்டுபிடித்தாள். செழியன் அந்த இருட்சிறையில் மிக்க சோர்வுடன் இருந்தான். எனினும் அவன் முகத்தில் வீர ஒளி சுடர்விட்டுக் கொண்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை. தாமரையின் முகம் வாடியிருப்பதைக் கண்ட செழியன் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். "ஏதாவது தேவையா?" என்று கேட்கலாமென நினைத்தாள். ஆனால் கேட்க இயலவில்லை. அண்ணியின் பிரிவால் ஏற்பட்டிருந்த வேதனை அவள் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது. அவளது முக மாற்றத்தைக் கண்ட செழியன், “ஏன் என்ன விசேடம்?" என்று கேட்டான் மெல்லிய குரலில். அவள் பதில் சொல்லவில்லை. சற்று நேரம் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் எந்தவித அர்த்தமும் ல்லை. - வெற்றுப் பார்வை! 'அய்யோ, பாவம்!' என்ற அனுதாப உணர்ச்சி மட்டும் சிறிது தலை காட்டியது அந்தப் பார்வையில். அவளைப் பற்றிய நினைவுகளால் குழம்பிப் போயிருந்த செழியனுக்கு அவள் அங்கேயே நின்று கொண்டிருக்க மாட்டாளா என்று இருந்தது. அப்படியே அவள் நின்று கொண்டிருந்தால் அவளைப் பற்றித் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று அவன் எண்ணினான். ஆனால் அவன் ஆசை ஈடேறவில்லை. தாமரை திரும்பினாள், அந்த இருட்குகையை விட்டு வெளியேறும் நோக்கத்துடன்!