உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

267


ரோமாபுரிப் பாண்டியன் 267 அண்ணி சாவின் மடியில்-அண்ணன் எதிரியின் பிடியில்-இனி மற்றவர்களின் நிலை...? இந்தப் பரிதாப நிகழ்ச்சியை நடக்கவிடக்கூடாது என்ற முடிவை ஏற்றாள் தாமரை. அண்ணன். சோழனுடைய அரண் மனைக்குச் சென்று விடாது தடுத்தாக வேண்டும் என்று உறுதி செய்தாள். அண்ணியையும் இனியொருமுறை காணவே முடியாது. வாழ்ந்த காலத்தை எண்ணிக் கண்ணீர் சிந்தி, வருங்காலத்தைப் பற்றிக் கோடிக் கணக்கான இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்த அந்த அருளொ ழுகும் முகத்தை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் உந்தித் தள்ள அவள் புறப்பட்டாள். அவள் தன்னந்தனியாகக் கிளம்புவதை மற்றவர்கள் மறுத்தனர். துணைக்கு வீரர்களை அழைத்துக் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர். கரிகால் மன்னனின் அறிவிப்பில் தன்னந்தனியாக வந்தால் இருங்கோவேள் அனுமதிக்கப்படுவார் என்றிருப்பதைச் சுட்டிக் காட்டி. தானும் அப்படிச் சென்றால்தான் அண்ணியின் திருமுகத்தைக் கடைசித் தடவையாகக் காணும் பேறு கிடைக்கும் என்று கூறிவிட்டுத் தாமரை புறப்பட்டாள். மரமாளிகையை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு, முத்துநகை அடைப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று கதவோரத்தில் இருந்தவாறே அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தாள். முத்துநகை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'கவலையில்லாதவள்' என்று மனதுக்குள் கூறிக் கொண்டே, அதை விட்டு வெளியேறினாள். செழியன் சுகமாக இருக்கிறானா? பாதுகாப்பாக இருக்கிறானா? இந்தச் சமயத்தில் அவன் வேறு தப்பி ஓடிவிட்டால் அண்ணன் மனம் மிகவும் ஒடிந்து போய்விடுமே என்றெண்ணியவாறு செழியன் அடைப்பட்டிருக்கும் சிறைக்குள் நுழைந்தாள். 'சாவூருக்குப் போகும் வழி - முகப்பிலே தெரிந்த இந்த எழுத்துக் களைக் கண்டதும் அவள் சிறிது நின்றுவிட்டாள். அவள் விழிகளில் நீர் துளிர்த்தது. இந்தக் கொடிய வாயில் வழியாக இருங்கோவேளின் இருட்குகையில் சிறைப்பட்டவர் இதுவரை சித்திரவதைதான் செய்யப் பட்டிருக்கிறார்கள்; கொழுந்து விட்டெரியும் தீக்குப் பக்கத்திலே இரத்தம் கசிந்துபோன பாதங்கள் தள்ளாடித் தடுமாற - நின்று மயங்கி வீழ்ந்திருக் கின்றனர். அவர்கள் சோழ நாட்டுக் கைதிகள் அணு அணுவாக வதைக்கப் பட்டிருக்கிறார்கள்; ஆனால் வாழ்வை முடித்துக் கொண்டதில்லை! உண்மைதான்! 'சாவூருக்குப் போகும் வழி' அந்த இருட்குகையின் வாசல் அல்ல; பூம்புகார் அரண்மனை! அங்கேதான் தாமரையின்