உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

கலைஞர் மு. கருணாநிதி


அழைத்தது யார் என்று செழியனுக்கு உடனே விளங்கி விட்டது. அமைச்சர் செந்தலையார்தான் அது. அவரை அவன் அங்கேயே ஒருமுறை பார்த்திருக்கிறான். மரமாளிகையில் அவனை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியதும் அவன் பார்த்த அதே பயங்கர உருவக் கிழவர் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரது ஆழமான கண்கள், தாமரையின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. "தாமரைக்கு முகத்தில் கலக்கம் குறைந்திருந்ததைச் செழியன் உணர்ந் தான். அண்ணனோ எனக் கருதி அவள் திடுக்கிட்டிருக்க வேண்டும் அண்ணனல்ல; அமைச்சர்தான் என்றதும் அவளது பயம் ஓடிவிட்டது. ஆனாலும் அவள் அமைச்சரை அங்கு எதிர்பார்க்க வில்லை. இருட்சிறையின் காவலனை அவள் அமைச்சரிடம்தான் அனுப்பினாள். தான் சோழ நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டதாகச் செய்தி சொல்லிவிடும் படிதான் அவள், அந்த வீரனைச் செந்தலையாரிடம் ஓடச் சொன்னாள். வீரன் போய் வருவதற்குள் செழியனுக்கு வேடமிட்டு வெளியேறி விடலாம் என்ற தந்திரமான திட்டம் வேறு அவள் மனத்தில் இருந்தது. ஆனால், நினைத்ததற்கும் நடந்ததற்கும் சற்று வேறுபாடு ஏற்பட்டு விட்டது. தாமரையினால் அனுப்பப்பட்ட காவலன், அமைச்சரி டம் சென்று தாமரை புகார் நகரத்துக்குப் பயணப்பட்டுவிட்டாள் என்று தகவல் கொடுத்தான். "இப்போது தாமரை எங்கேயிருக்கிறாள்?' என்று செந்தலையார் கேட்ட காரணத்தால், தாமரை இருட்சிறைக்குள் நுழைந் திருக்கும் செய்தியை அந்த வீரன் அவரிடம் சொல்ல நேரிட்டது. அதனால் செந்தலையார் ஏதோ ஐயமுற்றவராய் அங்கேயே வந்துவிட்டார். செந்தலையார் அண்மையில் வந்துவிட்டது கண்ட தாமரை, செழியனுக்குக் கண்ஜாடை தெரிவித்து அப்பால் சென்று தந்திரமாக நடந்து கொள்ளுமாறு மெல்ல இதழசைத்துக் கூறிவிட்டாள். செழியனும் வேளிர்படை வீரனைப் போலவே நடிக்கத் தொடங்கி அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான். இருட்சிறையின் கதவை அவனே மூடிப் பூட்டினான்.