உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

279


ரோமாபுரிப் பாண்டியன் 279 தாமரையின் பக்கத்தில் வந்து நின்ற செந்தலையார் "என்னம்மா! போவதற்கே முடிவு செய்து விட்டாயா?" என்று கரகரத்த குரலில் கேட்டார். 'ஆமாம் அமைச்சரே! இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை" என்று தாமரை பதில் கூறினாள். "கரிகாலன் உன்னைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டு, 'செழியனை விடுதலை செய்தால்தான் தாமரையை விடுவிப்பேன்' என்று நிபந்தனை போட்டு விட்டால் என்ன செய்வது?" என்று வினா எழுப்பினார். "கரிகால் சோழர், நாம் நினைக்கிறபடி அவ்வளவு நேர்மையற்ற வரல்லர். நம்மையெல்லாம் வளைத்துச் சிறையில் பூட்ட வேண்டு மென்றால் அவர் படைகளின் உதவியைத் தான் நாடுவாரே தவிரப் போர்முறை இலக்கணத்துக்கு முரணாகப் புறமிருந்து நம்மைத் தாக்க மாட்டார்." இப்படித் தாமரை கரிகாலனைப் புகழ்ந்து பேசியதும் செந்தலை யாரின் கிணற்றுக் கண்கள் உப்பிக் கொண்டன. முகம் மேலும் விகாரமாக மாறிற்று. உறுமிக் கொண்டார். அந்த உறுமலில் எவ்வளவு வெறுப்பு உணர்ச்சியிருந்தது என்பதைத் தாமரை புரிந்து கொண்டாள். சரி... இருட்சிறையில் என்ன செய்தாய்? செழியனைப் பார்த்தாயா? அவன் சுகம் விசாரித்தாயா? எப்படி இருக்கிறான் துரோகி? என்று கேலியும் கோபமும் கலந்து சிரித்தவாறு கேட்டார். 'செழியனின் சுகம் விசாரிக்கும் வேலையில்லை எனக்கு. அவன் ஓடிவிடாமல் பாதுகாத்து, அண்ணன் வரும்வரையில் இருட்சிறை யிலேயே மூடி வைத்திருப்பது தான் என்னுடைய பொறுப்பு!' இந்தப் பதில் செந்தலையாருக்கு ஆத்திரமூட்டியது. "செழியனைக் காவல் புரிய இங்கு படை வீரர்கள் இருக்கிறார்கள்; தளபதியிருக்கிறார்; நானும் சாகவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்!" என்று அவர் வேகமாகப் பதில் சொன்னார். "நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் நான் மறுக்கவில்லை. அண்ணனைப் போர் வெறியராக மாற்றி, மறவர் குலப் பண்புக்கு மாறாக மாற்றாரிடம் நடந்து கொள்ளக் கூடிய கொடியவராக மாற்றி, எந்நேரமும் அவர் இருதயத்தில் பழிக்குப் பழி' என்ற பயங்கரமான வார்த்தைகளை ஒலிக்கச் செய்துகொண்டு. இந்த மரமாளிகையிலேயே வேளிர்குலத் துக்கு முடிவு கட்டக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, நீங்கள்