ரோமாபுரிப் பாண்டியன்
281
ரோமாபுரிப் பாண்டியன் 281 தன்னந்தனியாகச் சிக்கிக் கொண்ட இருங்கோவேள் மன்னனை, உயிரைப் பணயமாக வைத்தல்லவா காப்பாற்றினேன்? இந்த தள்ளாத வயதிலும் வேளிர்குலத்து மக்களின் வெற்றியொன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் அதே சிந்தனையாக உழன்று கொண்டிருக்கும் என்னைப் பார்த்து மிக அவசரப்பட்டு பேசிவிட்டாளே இந்த இளம் பெண்! சே சே! இவ்வளவு உழைத்தும் என்ன பயன்?' என எண்ணியவாறு இருட்சிறையின் கதவை நோக்கினார். அது பூட்டப் பட்டுக் கிடந்தது. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார். இருட்சிறையின் காவலன் அப்போதுதான் வந்து கொண்டிருந்தான். 'இந்தச் சிறையின் சாவிகளில் ஒன்று உன்னிடமிருக்கிறதல்லவா?" எனக் கேட்டார். "இருக்கிறது" என அவனும் தலையசைத்தான். பிறகு அமைச்சரின் உத்தரவுப்படி சிறை திறக்கப்பட்டது. செழியனைக் காண்பதற்கு மிக ஆவல் கொண்டவராக அமைச்சர் உள்ளே நுழைந்தார். அமைச்சருக்கு அங்கே காத்திருந்தது வெறும் ஏமாற்றந்தான் செழியனைக் காணவில்லையென்றதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'ஓ' வென்று கத்தினார். கிழப்புலியின் உறுமலைப் போலிருந்த அந்தக் கதறல் கண்டு மரமாளிகையே அதிர்ந்தது. ஒரு நொடிப் பொழுதில் மரமாளிகையில் உள்ள வீரர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். . "செழியன் தப்பி விட்டான்; தாமரையை ஏமாற்றி அவளுடன் போய்க் கொண்டிருக்கிறான். விடாதீர்கள்; பிடித்துக் கொண்டு வாருங்கள்! என்று கத்தினார். செழியனைக் காணவில்லை என்றதும் அவருக்குத் தாமரையின் மீதுதான் சந்தேகம் ஏற்பட்டது. தாமரையுடன் சென்ற வீரன்தான் செழியனாக இருக்க வேண்டுமென்று அவர் முடிவு கட்டிக் கொண்டார். அவரது கட்டளை பிறந்ததும் குதிரைகள் மரமாளிகையை விட்டுப் பறக்க ஆரம்பித்தன. செந்தலையாருக்குக் குழப்பமும் கிலியும் அதிகமாயின. இருங்கோவேள் மன்னரின் துணைவியோ எதிரியின் கோட்டைக் குள்ளேயே பிணமாகி விட்டாள். அவள் சவத்தைக் காணச் செல்கின்ற தாமரையும் புகார் அரண்மனையிலே சிக்கி விடமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? எதிர் காலத்தையாவது ஏற்றம் மிக்கதாகச் செய்ய வேண்டும் என்று நடுக்காட்டிலே வாழ்க்கை நடத்துகின்ற வேளிர்குடிக்கு மீண்டும் கடுமையான சோதனைக் காலம் துவங்கிவிட்டதோ என்று நெஞ்சிலே முளைவிட்ட எண்ணத்தைத் தொடர்ந்து அவரது தளர்ந்துபோன உடல் தள்ளாடத் துவங்கியது.