உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

கலைஞர் மு. கருணாநிதி


296 கலைஞர் மு. கருணாநிதி மயில் தோகை, மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளின் நடமாட்டம் தெருக்களில் இல்லை. எங்கும் வெட்ட வெளி! எங்கும் இருட்டு! எங்கும் சோகம்! எங்கே திரும்பினாலும் இடுகாட்டு அமைதி! தலைநகரத்து மக்களின் முடிவு நிறைவேறிவிட்டால் பூம்புகார் இப்படியல்லவா பொலிவிழந்து வாடும் என்று எண்ணி ஏங்கினான். - அப்போது மற்றொரு செய்தி வந்துவிட்டது. "தலைநகரத்து மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு ஆடு மாடுகளோடு தட்டு முட்டுச் சாமான்களோடு பயணத்திற்கான ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டார்கள். எங்கே போவது என்று இலட்சியம் எதுவுமில்லையாம். இங்கிருந்து வெளியேறினால் போதும் என்று முடிவு கட்டிவிட்டார்களாம்!" , இதைக் கேட்டதும் கரிகாலன் என்ன பாடுபட்டிருப்பான்; நாளைக்கு யாரை வைத்துக் கொண்டு நாட்டை ஆள்வது என்ற பிரச்சினை பிறகு இருக்கட்டும். நாட்டைத்தான் ஆள்கிறான், அல்லது நாடோடியாகப் போகிறான். அதுவல்ல இப்போது அவனுக்கு பெருங்கவலை! தமிழகத்து வரலாற்றில் இப்படியொரு நிகழ்ச்சி, தன் காலத்தில் நடைபெற்றதாகப் பொறிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்றே அவன் கலங்கினான். தான் செய்த காரியம் தவறுடையதாகவே இருந்தாலும் அதைச் சற்றுப் பொறுத்துக் கொள்ளக்கூடிய எண்ணம் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய்விட்டதே என்ற வேதனை அவனைக் குடைந்தது. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா? பொழிலும் புனலும் சூழ்ந்த பூம்புகார்த் திருநகரைப் புழுதி மேடாக்கி விட்டு, அதன் உச்சியிலே உட்கார்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது நிலைமையை உடனே சமாளித்துச் சோழ மண்டலத்துப் பெருமையைக் காப்பாற்றப் போகிறோமா? இந்தக் கேள்விக்கு ஆலோசனை மண்டபத்தில் இருந்தவர்கள் யாரும் ஒழுங்கான பதில் கூறவில்லை. ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். எதுவும் ஏற்றதாக அமையவில்லை. அவர்கள் தாம் என்ன செய்வார்கள்? வரலாற்றில் சந்திக்காத ஒரு நிகழ்ச்சியல்லவா இது? எதிரிக்குப் பயந்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட மக்களையும், நாட்டை விட்டோடிய மன்னர்களையும் பற்றித்தான் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். படையெடுத்து வருகிற எதிரியும் முதலில் பறையொலிப்பானாம்; 'வில்லெடுத்து