உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

297


ரோமாபுரிப் பாண்டியன் 297 வாளெடுத்துப் புறப்பட்டு விட்டோம் நாங்கள். ஆகவே களம் காணக் கூசுகின்ற பெண்களே! நோய்நொடி பிடித்தாட்டும் பெரியோரே! உடனே புறப்படுங்கள். குழந்தைகளையும் மாடு கன்றுகளையும் அழைத்துக் கொண்டு!" என்பதாக. இவ்விதங்களில்தான் நகரைவிட்டு மாந்தர் கிளம்பியதாக அறிந்தவர்கள், பூம்புகாரிலே புதுமையை அல்லவா காண்கிறார்கள்! மன்னனின் செயல்மேல் வெறுப்புற்றல்லவா மக்கள் வெளியேறுகிறார்கள்! அதனால்தான் ஆற்றொணாத் துயரோடு, அலைமோதும் நெஞ்சோடு. 'எதைச் செய்வது' என்ற குழப்பத்தோடு நிற்கின்ற மன்னனுக்கு என்ன வழி சொல்வது?' என்று புரியாது தவித்தனர். உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள் என்றால், அந்த உண்மையைப் புரியாதவன் பின்னால் ஐம்பது பேர் அரும்பிவிட்ட நிலையை எப்படித்தான் மாற்றுவது? எல்லாரும் மௌனமாகச் சிந்தனையில் மூழ்கிய வண்ணம் சில வினாடிகள் பேசாமல் இருந்தார்கள். "மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து விட்டார்கள். சோகம் கப்பிய முகத்தினராய்ப் பிஞ்சுக் குழந்தைகளையும் பழுத்த கிழடுகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுவிட்ட காட்சி எங்களை அழவைத்து விட்டது மன்னவா!" என்று ஒரு பெருவீரன் சொல்லிக்கொண்டே தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டான். கனல் பறக்கும் கரிகாலனின் கண்களிலே நீர் முத்துக்கள் ர் தலைகாட்டின. சற்று நேரம் ஒரே அமைதி. பெருந்தேவியின் சடலத்தை வேளிர்குல இளவரசியிடம் ஒப்படைத்து அவளைத் தலைநகரை விட்டு உடனே வெளியேற்றுவது தான் நிலைமையைச் சீர்படுத்த நல்ல வழி!" என்று நெடுமாறன் எடுத்துரைத்தான். 'மாண்டுபோன அரசியின் பிணம் வெளியேற்றப்பட்டால் வெளியே றிக் கொண்டிருக்கும் மக்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். மலர்ந்த முகத்தோடு' என்று அவன் நம்பியதில் தவறில்லை! அவனது இந்த முடிவை அங்கிருந்த சிலர் வரவேற்கத்தான் செய்தனர். ஏனெனில் எவருமே அந்த யோசனையை மறுத்துப் பேசவில்லை. மௌனமாக மன்னனின் முகத்தை ஏறிட்டு நோக்கினர். வேறு வழி இல்லை! ஒத்துக்கொண்டு விடுங்கள்!' என்று வேண்டுகோள் விடுத்தது அவர்களுடைய பார்வை.