உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

கலைஞர் மு. கருணாநிதி


300 கலைஞர் மு.கருணாநிதி கரிகாலன் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் தன் உள்ளத்தை அப் போது திறந்து காட்டவும் முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றியவன் ஆயிற்றே அவன்! எந்த யோசனையையும் அவன் வெளியிடுவதற்கு முன்பு அவனை அங்கிருந்து அனுப்பிட வேண்டுமென்று மன்னன் முயன்றான். "கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ போய் ஓய்வெடுத்துக் கொள். என்ன செய்வதென்று யோசிப்பதற்கே மன்றம் கூடியிருக்கிறது!” என்று மன்னன் கூறியதும், தனக்கு இடம் கிடைத்ததென்று வளவன், "அப்படியானால் இந்த மன்றம் என்யோசனைகளை எடுத்துக் கொள்ளட்டும்" என்று ஆரம்பித்து விட்டான். அரசனுக்கு எதுவும் பேசமுடியவில்லை. வளவனையே பார்த்தவாறு இருந்தான். மன்றத்திலிருந்தவர்களுக்கும் வளவனின் போக்கு சற்று அதிகப்படியாகவே தெரிந்தது. அந்த நிலைமைகளையெல்லாம் கவனிக் காதவனைப் போல் வளவன் பேசத் தொடங்கினான். "ஏழை சொல் அம்பலமேறாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கரிகால் பெருவளத்தாரின் நல்ல இதயத்தில் என்னைப் போன்ற குடிமக னுக்குத் தனியிடம் உண்டு என்பதை நானறிவேன்; என் எண்ணத்தில் பழுதிருந்தால் எல்லாரும் மன்னித்துக் கொள்ளுங்கள். தலைநகரில் மக்கள் இல்லை என்ற செய்தி வெகு விரைவில் வரக் காத்திருக்கிறது. பெருந்தேவியின் உடலை அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங் களும் முடிந்துவிட்டன. அரசரோ, மக்களும் வெளியேறக் கூடாது; பெருந்தேவியின் உடலை சவ அடக்கத்திற்கான ராஜ மரியாதைகளும் குறையக் கூடாது' என்று எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய நினைப்பில் ஊனம் வராதவாறு நான் ஒரு யோசனை கூறத் துணிந்திருக்கிறேன்!" கம்பீரமாக ஒலிக்கும் வளவனின் பேச்சில் கவரப்பட்டவர்களாக அனைவரும் அமர்ந்திருந்தனர். அவன் நிறுத்தவில்லை; தொடர்ந்து பேசினான். "தலைநகரிலிருந்து வெளியேறும் மக்களைத் தடுத்து நிறுத்த மன்னர் ஒருவரால்தான் முடியும். ஆகவே, அவர் உடனே மக்களைத் தொடர்ந்து சென்று தடுத்து அழைத்து வரவேண்டும். அதே சமயம் வேளிர்குல இளவரசிக்கு எந்த விஷயமும் காதில் எட்டாதவாறு செய்துவிட்டுப் பெருந்தேவியின் சவ அடக்கத்தையும் முடித்துவிட வேண்டும். அவசரக் காரியமாக மன்னர் வெளியே சென்றிருக்கிறார் என்று வேளிர்குல இளவரசிக்குக் கூறிவிட்டுக் காரியத்தை நடத்தி விடலாம்".