உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

கலைஞர் மு. கருணாநிதி


302 கலைஞர் மு. கருணாநிதி "நான் சந்திக்கப் போவது என்னுடைய நாட்டு மக்களை! அவர்கள் என்னை எதிர்த்துத் தாக்குவார்கள் என்றால், அதைத் தடுக்க ஒரு படை ஏன்? அவர்கள் கையாலேயே சாவதுதான் மேல். நாட்டு மக்கள் எதிர்த்த பிறகு, படையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?" என வெண்கலக் குரலில் முழங்கிவிட்டு, வளவனை நன்றியுணர்ச்சியுடன் பார்த்து விட்டு, மன்றத்தை விட்டு வெளியேறினான். மெய்க்காப்பாளன் மன்னனுடன் சென்று வாட்டசாட்டமாக நின்று கொண்டிருந்த வெண்புரவியொன்றை எதிரே கொண்டு வந்து நிறுத்தினான். கரிகாலன் அதிலே தாவி ஏறிக்கொண்டு கிளம்பினான். மற்றொரு குதிரையில் மெய்க்காப்பாளன் பின் தொடர்ந்தான். பின்னர் மன்றத்தினரும், நெடுமாறனும், கடியலூர் புலவரும், வளவனும் பெருந்தேவியின் சவம் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். தன்னை அனுமதிப்பார்களோ இல்லையோ என்ற சந்தேகத்துடன், வளவன் பயந்தவாறு அவர்கள் பின்னாலேயே சென்று கொண்டி ருந்தான். அரசன் வருகைக்காகக் காத்திருந்தவர்களிடமும், தாமரை யிடமும் அரசன் அவசரக் காரியமாகத் தலைநகருக்குச் சென்றிருப்பதாகக் கூறி.மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தனர் மந்திரி பிரதானியர். வளவன் ஓர் ஓரத்தில் வந்து நின்று பெருந்தேவியின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தான், அதுவரையில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த உழவனின் முகத்தில் துயர நிழல் படர்ந்தது. அவன் கண்கள் கலங்கின, யாரும் தன்னைப் பார்த்து விடாமல் சமாளித்துக் கொண்டான். . பெருந்தேவியின் உடலை எடுத்து மலர்த்தேர் ஒன்றின் மீது வைத்தார்கள். அப்போது தன்னை அறியாமல் தாமரை 'கோ' வெனக் கதறி விட்டாள். வேளிர்குடி வீரனைப் போல் உடை அணிந்திருந்த செழியனின் கண்கள் மழை பொழிந்தன. தேவியைச் சுமந்தவாறு தேர் நகர்ந்தது. தாமரையும் மற்ற அனைவரும் அடிமேல் அடி வைத்து அந்தத் தேரின் பின்னே நடந்து கொண்டிருந்தனர்; வளவனும் அந்தக் கூட்டத்தில்தான் இருந்தான். சவ ஊர்வலம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, தாமரையின் கண்களில் வளவன் பட்டு விட்டான். செழியனும் வளவனை பார்த்தான். அவனுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. ஆனால் தாமரைக்குச் சந்தேகம் தோன்றி விட்டது. தாமரை தன்னைப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வளவன், அதற்காக எவ்வித அச்சமும் கொள்ளாமல் நடந்து கொண்டுதானிருந்தான். அண்ணியின் சவ ஊர்வலத்தில் எத்தனை எத்தனையோ வேதனை தோய்ந்த நினைப்புகளுடன் செல்லும் தாமரைக்குப் புதிய பயம் ஒன்று வந்து