388
கலைஞர் மு. கருணாநிதி
388 கலைஞர் மு. கருணாநிதி பொறுப்பேற்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். அவன் வாயிலாகத் தான் வெளிப்பட வேண்டும். இந்த உண்மைகள் தமிழ்நாட்டு மண்ணிலே மட்டுமல்ல; ரோமாபுரி மண்ணிலும் புதையுண்டு கிடக்கின்றன. இதனை அகழ்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புக் குரியவனை நான் உடனடியாகக் கண்டுபிடித்தாக வேண்டும்!" மன்னன் மிக்க அக்கறையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இந்தத் தகவலைப் புலவர் உருத்திரங்கண்ணனாரிடம் வெளியிட்டான். உருத்திரங்கண்ணனார் காவலனின் வாய் உதிர்த்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, அவர் மனதில் ஒரு கணநேரம் பிரள யமே நேர்ந்துவிட்டது. சோழ மண்டலத்திலே அடுக்கடுக்காகக் குவிந்து வருகிற அதிர்ச்சிகளில் இனிப் புதியொதொரு கூட்டமே அல்லவா இடம்பெறப்போகிறது! தமிழ் மண்ணுக்கும் ரோமாபுரிக்கு மிடையே உள்ள ஏதோ ஒரு மர்மமான உண்மையைப் பற்றி அல்லவா மன்னர் குறிப்பிடுகிறார்? அது பற்றி மேலும் விளக்கம் கேட்க விரும்பாமல், “அப்படியானால், காரிக்கண்ணனாரை இப்போதே விடுதலை செய்து விடலாமல்லவா?" என்று ஆவலுடன் வினவினார். மன்னன் யோசித்தான். வளவன் சொன்ன வேலையை நினைத்துக் கொண்டான்! யவனக்கிழவர் வேடத்தில் வேளிர்குல வீரனைச் சந்தித்துச் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வளவன் குறித்த வேளை நெருங்கி விட்டதே என்ற பரபரப்பு அவனை வளைத்துக் கொண்டது. தானே நேரில் சென்று புலவரை விடுவித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றினாலும், அவரைக் காண்பதற்கு அவன் மிகவும் வெட்கப்பட்டான். அதனால் அங்கிருந்த ஓர் ஓலையில் கீழ்க்கண்டவாறு எழுதினான்; 'காரிக்கண்ணனாரைச் சிறையிலிட்ட கரிகாலன் மாண்டு விட்டான். புலவர் தந்த கடமையை நிறைவேற்றப் புதுக் கரிகாலன் பிறந்திருக்கிறான். வெற்றிக்குப் பிறகு நேரில் காண்பான்.' மெய்க்காவலனை ஓலையைச் சுருட்டியவாறு கைதட்டி, அழைத்தான். ஓடிவந்த காவலனிடம் அதனைத் தந்து, “புலவர் கடிய லூராருடன் சென்று காரிக்கண்ணனாரை விடுதலை செய்திடுக!" என மொழிந்து முத்திரையிட்ட கணையாழி யையும் அடையாளத்திற்குக் கொடுத்தனுப்பினான். வணங்கி விடைபெற்ற கடியலூராரை ஏழடி நடந்து சென்று வழியனுப்பி வைத்து, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் கரிகாலன்.