ரோமாபுரிப் பாண்டியன்
387
ரோமாபுரிப் பாண்டியன் "அப்படியா? எங்கே?" 387 ஆவலுடன் மன்னன் அந்த ஓலைச் சுவடியை வாங்கிக் கொண்டான். கடியலூராரையும் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு கட்டிலில் உட்காரச் சொன்னான். அவரும் அமைதியாக உட்கார்ந்து சுவடி படிக்கும் மன்னனின் முகமாறுதலைக் கவனித்துக்கொண்டிருந்தார். கரிகாலன் சுவடியை நெஞ்சுக்குள்ளாகப் படித்துக் கொண்டான். அவன் முகம் ஒரு சமயம் மலர்ந்தது. பிறிதொரு சமயம் சிவந்தது. கண்கள் சில நேரங்களில் குறுகிப் போயின. சில நேரங்களில் ஒளிவிட்டு விரிந்து கொண்டன. இதழோரத்தில் புன்னகை தலைகாட்டும். உடனே அதனை உள்ளே இழுத்துக் கோபம் உதட்டைத் தள்ளிவிடும்; நெஞ்சு உயரும்; அடுத்த கணம் முதுகு வளையும்; பெருமூச்சு புறப்படும்; உடன் முகத்தில் பெருமிதம் தோன்றும்! இத்தனை வகை மாறுதல்களுடன் கடைசி ஓலையையும் படித்து முடித்த கரிகாலன், கடைசி ஓலையைப் புரட்டி, சுவடியை ஒழுங்காகக் கட்டியவாறே கடியலூர் உருத்திரங்கண்ணனாரை நோக்கி, "காரிக் கண்ணனாருக்கு விடுதலை! விடுதலை! புலவர் பெருமானே. என்னை மன்னித்து விடுங்கள்! பெரும் பழிக்கு ஆளான இந்தப் பாவிக்கு ஏற்ற தண்டனையைப் புலவர்கள் சார்பாகத் தாங்களே அளியுங்கள். காரிக் கண்ணனார் களங்கமற்றவர். நான்தான் அவரைக் கூண்டில் அடைத்த கயவன்! கயவன்!' என்று கதறினான். தன் நிலைபற்றிய உண்மைகளை ஓலைச்சுவடியில் காரிக்கண்ணனார் எழுதியிருக்கக் கூடுமென்ற யூகத்தோடு புலவர் கடியலூரார் அரசனைப் பரிவுடன் நோக்கி, "மன்னர் மன்னா! காரிக்கண்ணனார் குற்றவாளியல் லர் என்று தாங்கள் கண்ட தீர்ப்பே தாங்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகளைத் தீர்க்க வல்லது. நாட்டுக்குத் துரோகி என்று சந்தேகப்பட் டுத்தானே சிறை வைத்தீர்கள்? அதிலொன்றும் பெரும் பாதகமில்லையே! ஆகவேண்டியதைப் பாருங்கள். அரசே! நான் ஒன்று கேட்கிறேன். அதற்கு மட்டும் முடிந்தால் விடையளிக்க வேண்டுகிறேன்.தான் குற்றவாளி அல்லவென்று பூம்புகார்ப் புலவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதை நான் அறியலாமா?" என்று கேட்டார். 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! இந்த ஓலைச்சுவடியில் பதுங்கியிருக்கும் உண்மைகள் எனக்குப் பிறகு இன்னும் ஒரே ஓர் ளுக்குத்தான் தெரியவேண்டும். இதிலுள்ள வரிகளும் யாராலும் புரிந்து கொள்ளக்கூடிய சுலபமான வரிகள் அல்ல! அவ்வளவு கடினமான தமிழ் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு வார்த்தையும் சூசகமானது! அந்தச் சூசகத்திற்கான விளைவுகள் வெற்றிகரமாக ஏற்படுவதற்கும்