உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

கலைஞர் மு. கருணாநிதி


386 கலைஞர் மு. கருணாநிதி "உறையூர் தந்த ஒப்பில்லா வீரனே! உத்தமச்சோழ மன்னனே! உம் கண்ணில் நீர் என்றால் அது என் போன்றோர் மனப்புண்ணில் வேல் பட்டது போலன்றோ! கவலையைத் துறந்திடுக; காரிக்கண்ணனார் தவறு செய்தார் என்ற காரணத்தால்தானே சிறை வைத்திருக்கிறீர்கள்? அநியாய மாக அவரைப் பூட்டி வைக்கவில்லையே! பிறகேன் மனம் நொந்திட வேண்டும்?" என்று கடியலூரார் ஆறுதலையும் கேள்வியை யும் ஒன்றாக இணைத்தார். என் "எனக்கெதிராகப் புலவர் காரிக்கண்ணனார் புறப்பட்டதே எனக்கும் ஆட்சிக்கும் இழுக்கல்லவோ? என்னிடமோ என் ஆட்சியிடமோ அவருக்குக் குறை தோன்றிய காரணத்தால் தானே எதிரிகளுடன் உறவாட நினைத்தார்? அந்த நினைவுக்குக் காரணமானவன் நான்தானே? என் நாட்டுப் புலவரின் புகழுரையைக் கூடப் பெறமுடியாத நான், இழிதகை வேந்தனன்றோ? "பெருவழுதிப் பாண்டியரையும், தங்களையும் இணைத்து அவர் பாடிய பாடலை நான் கேட்டு மகிழ்ந்தேன். மன்னவா! அதில் தங்களைப் புகழ்ந்துதானே இருக்கிறார்?" "முதலில் அந்த பாட்டைக் கேட்டபோது எனக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படவில்லை. இப்பொழுது எழுந்துள்ள சூழ்நிலை களைப் பின்னணியாக வைத்து அந்தப் பாட்டை மறுபடியும் நினைத்துப் பார்த்தால், காரிக்கண்ணனாரின் எண்ணம் நன்கு தெளிவாகும்! புலவர் அவர்கள் அந்தப் பாட்டில் பாண்டியரைப் புகழ்ந்த அளவுக்கு என்னைப் புகழவில்லை!" 7 "அதுதான் மன்னா தமிழ்ப் பண்பு! தாங்கள் அறியாததா, என்ன? விருந்தினராக வந்த வேந்தரைத் தானே அதிகமாகப் பாராட்டிப் புகழவேண்டும்? தங்களைத் தான் காரிக்கண்ணனார் இதயத்தில் வைத்துப் புகழ்ந்து கொண்டிருக்கிறாரே!" "இல்லை! வீண் கற்பனையே!" "இதோ இந்த ஓலையில் எழுதியிருப்பதைப் பாருங்கள்; 'என் இதய மேவும் கரிகாலர்க்கு இச்சுவடி காணிக்கை' என்றுதான் துவங்கி யிருக்கிறார்!" "சிறை வாசத்திலே புலவர் எழுதிய பாடல்களா இவை? எங்கே படியுங்கள்; கேட்போம்!" "பாடல்கள் அல்ல மன்னா! தாங்கள் மட்டுமே படிக்க வேண்டிய பரம ரகசியங்கள் இதிலே அடங்கியிருப்பதாக இரண்டாவது வரி சொல்கிறது!"