உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

கலைஞர் மு. கருணாநிதி


392 கலைஞர் மு. கருணாநிதி அளித்திருக்கிறேன். அவள் என் துணைவி. நாடில்லாத இந்த மன்னனுக்கு அவள் பட்டத்தரசி. நாடு கிடைத்தாலும் அவள் தான் அரசி. "அப்படிப்பட்ட ஆசைக் கிளியை நான் இழக்க வேண்டுமா இந்தச் சதித்திட்டத்தால்? என் அரசி கரிகாலனைக் கொல்லக்கூடாது என்று துடித்தேன். அவளுடைய கையால் கரிகாலன் சாவது பெரும் இழுக்கு என்று கருதினேன்; 'இருங்கோவேள் தன் மனைவியை அனுப்பிக் கரிகாலனைக் கொன்றான்! அவனைப்போலக் கடைந்தெடுத்த கோழை உலகிலேயே கிடையாது, என நாடு முழுவதும் பேசும் என்றே பயந்தேன்; என் வீரத்திற்கும், தன்மானத்திற்குமே உகந்ததாக படவில்லை. அவச் சொல் ஏற்பட்டு விட்டால்-தன் ஆற்றலில் நம்பிக்கையின்றி - தோளில் பலமின்றி - நெஞ்சில் உரமின்றி மனைவியை அனுப்பி மன்னனைக் கொன்றான் என்ற மாபழி ஏற்படுமேயென்று அப்போது மட்டும் ஏன் அஞ்சினேன்? ஏன் கொலையைத் தடுத்தேன்? "இப்போது என் துணைவியை விட்டுக் கொலை செய்யத் தூண்டுகிறேன்; என்ன காரணம்? அங்ஙனமாயின் முத்துநகை என் மனைவியில்லையா? என் இல்லக் கிழத்தியில்லையா? வழியிலே கிடைத்த காமக் கிழத்தியா அவள்? அய்யகோ! இல்லை! இல்லை! அவள் உத்தமி; கற்பு நிறை பொற்புடை மங்கை அவளும் எனக்குத் துணைவியேதான்! அவள் கரிகாலனைக் கொன்றால் ஊர் உலகத்திற்குத் தெரியும்படியாக பழிஎன்மீது விழாது. ஆனால் மனைவியை அனுப்பிக் கரிகாலனைக் கொன்றேன்-வென்றேன்- என்ற அவமானமிக்க பழிச் சொல்லை என் மனமே என் காதுகளில் போட்டு அந்தத் தீச்சொல்லைக் கேட்டுத் துடித்துப் போகுமே! "அப்படியானால் என்ன செய்வது? கரிகாலனைக் கொல்லாமலே விட்டு விடுவதா? வீரபாண்டி என்ற பெயரிலே முத்துநகையை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றுகின்ற திட்டத்துடன் எங்கேயாவது ஓடிவிடலாமா? அப்படி ஓடினால் இல்வாழ்வுச் சுகம் மிஞ்சும், இலட்சியம் நிறைவேறுவது எப்படி? வேளிர்குல மக்களை வெற்றித் திருவிழா காணவைப்பது எப்படி? சோழ மண்டலத்தை நாணவைப்பது எப்படி? "இப்போது எனக்கு ஏற்பட்ட பிரச்சினையே இரண்டு கேள்விகளில் அடங்கி விட்டதே!" "முத்துநகையா? சோழ மண்டலமா?" "இந்த இக்கட்டான கேள்விகளுக்கு நான் எப்படி விடை காணப் போகிறேன்? 'எது தேவை? வாழ்வா? சாவா?' என்று கேட்டால்கூடச் 'சாவு' என்று உடனே பதில் கூறிவிடுவேன்.