414
கலைஞர் மு. கருணாநிதி
414 கலைஞர் மு. கருணாநிதி பழுத்தவன் என்று பெயரெடுத்தவன். நானே இந்த இருங்கோவேளிடம் ஏமாந்து விட்டேன் என்றால் நீ எந்த மூலை? வளவனாக வந்து, என் உயிரையே காப்பாற்றியவராக எப்படியெல்லாம் என்னுடைய பரிவி னையும் பாசத்தினையும் அவர் பெற்றுவிட்டார்! என்ன இருப்பினும், இருங்கோவேளின் அறிவினை மெச்சிடத்தான் வேண்டும். ஆற்றலைப் போற்றிடத்தான் வேண்டும். இத்துணைத் தேர்ந்த நடிகராக அவர் திகழ்வார் என்று நான் எண்ணிடவே இல்லை. ஆனால் அந்தக் கூர்மை நாட்டின் நடப்புக்கும் மக்களின் நல்வாழ்வுக்குமே பயன்படுவதாக அமையக் கூடாதா? அரங்கத்தில் நடிப்பதோடு நில்லாமல் வாழ்க்கை யில் நடித்திடவும் அது தூண்டிட வேண்டுமா? அந்த நடிப்பாற்றலும் சூழ்ச்சிக்கும் சூதுக்கும்தான் துணை போக வேண்டுமா? உண்மையைத் திரித்திடவும், பொய்ம்மையைப் பரப்பிடவுந்தான் அது உரமாக வேண்டுமா? நல்ல உள்ளங்களை யெல்லாம் கொல்லெனச் சிரிக்க வைத்து, அவர்கள் சிரிக்கும் பொழுதே குடிக்கப் போகும் பாலில் கொடிய நஞ்சினைக் கலப்பது போல அடாத செயலுக்கெல்லாம் அது இடந்தர வேண்டுமா? என்ன வேண்டு மானாலும் பேசி, எப்படி வேண்டுமானா லும் நடந்து எந்த வகையிலாவது தனக்குப் பெயர் வந்தால் போதும் என்று, தன்னுடைய பிற்போக்குத்தனத்தை நோக்கி மக்களைத் திசைதிருப் பிக் கேவலமான செல்வாக்குப் பெறும் கீழ்த்தரமான நிலைக் குத்தான் ஒருவருடைய அறிவும் ஆற்றலும் இறங்கிட வேண்டுமா? அதுவும் இடையில் வந்து வளவனாக நம்மிடம் ஒட்டிக் கொண்ட இருங்கோவேள், இப்படிக் கூட இருந்தே குழிபறிக்க முனைந்திடுவார் என்று நான் கனவுகூடக் கண்டிடவில்லை. செழியன் மட்டும் தக்க சமயத்தில் வந்து என்னை எச்சரித்திடத் தவறியிருந்தால்..." விண்ணிலே பூத்துக் கிடக்கும் மீன்களை அண்ணாந்து வேடிக்கை பார்த்தவனாக ஒரு வறண்ட சிரிப்பினை உதிர்த்தான் கரிகாலன். அதற்கு மேல் சொல்ல வேண்டாம் அரசே, சொல்ல வேண்டாம். நினைத்தாலே நெஞ்சம் 'திகீர் என்கிறது! ஆனால் இத்துணை வஞ்சகமாக அவர் நடந்து கொண்டுங்கூட அந்த ஆளை இன்னும் தாங்கள் 'அவர்...அவர்' என்று மரியாதை குறையாமல் குறிப்பிடுவதுதான் எனக்கு வியப்பைக் கொடுக்கிறது..." என்று குமுறலுடன் கூறினாள் முத்துநகை. "அதுதானே அம்மா நம்முடைய தமிழ்ப் பண்பாடு! இருங்கோ வேளே. 'இந்தக் கரிகாலனுக்கு என்ன தெரியும்? இவனுக்கெல்லாம் ஆளத்தெரியுமா?' என்று எடுத்தெறிந்து ஏசியிருக்கலாம்; ஏகடியம் பேசியிருக்கலாம். ஆனால் உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த மண்ணுக்கே சொந்தமான உயரிய