உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

கலைஞர் மு. கருணாநிதி


422 கலைஞர் மு. கருணாநிதி "அதுவா.. அதனைத் தாமரைதான் என்னிடம் தந்தாள்!" 'என்ன! தாமரை உங்களிடம் தந்தாளா? அவளை எங்கே சந்தித்தீர்கள்!" சற்று உரத்த குரலிலேயே திகைப்புடன் கேட்டான் கரிகாலன். “அது பெரிய கதை கதை மன்னவா, பெரிய கதை! தங்களுடைய நேரத்தைப் பாழடிக்கக் கூடாதே என்று நினைக்கிறேன். தாங்கள் மட்டும் சற்றுப் பொறுமையோடு செவிமடுப்பதானால் விடிவதற்குள்ளே சுருக் கமாகச் சொல்லிவிடுவேன். என்னுடைய கதை தங்களுக்கும் தெரிந்தி ருக்க வேண்டியதுதான். ஏனெனில் என்னுடைய எதிர்கால வாழ்வே, தங்களின் ஆதரவைக் கொண்டுதான் அமையப் போகிறது. சொல்லட் டுமா?" என்று இறங்கிய குரலில் வேண்டினான் இளம்பெருவழுதி. சரி! சொல்லுங்கள் கேட்போம்" என்று தம் செவி மடலைத் தீட்டிக் கொண்டான் கரிகாலன். இளம்பெருவழுதி மொழிந்த அந்த இனிய கதைப் பெட்டகம் என்ன தெரியுமா? அன்று கொற்கைப் பட்டினத்திலே கோலாகலமான முத்துக் குளிப்பு விழா! பொய்கை நீரிலே தலை நீட்டி எட்டிப் பார்த்திடும் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல. மனிதப் பிறவிகளின் இதயத் தாமரையும் எழுச்சிபெற்றுச் சிரித்திடும் வண்ணம் - உதய சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகைத் தழுவிட வரும் இளங்காலை-இனிமையான வேளை! - துறைமுகப் பகுதியில் வழக்கமான ஏற்றுமதி - இறக்குமதிகளின் இரைச்சலோ, பரபரப்போ எதுவும் இல்லை. மாறாக, மரக்கலங்கள் யாவும் மலர்ச்சரங்கள் சூடி, 'நாங்கள்தான் நாள்தோறும் இந்த நீலக்கடலின் நீளத்தை அளக்கிறோம்! இன்று ஒரு நாள் இந்த மனிதர்கள் அதன் ஆழத்தை அளக்கட்டுமே!' என்று ஏளனம் புரிவது போல் அசைவற்று நின்றிருந்தன. அவற்றில் அடுக்கடுக்காகக் குடியேறியிருக்க வேண்டிய முத்துப் பரல்கள், முறுகிய சங்குகள், பவள மணிகள், பட்டுத்துணிகள், மயிலின் தோகைகள், ஏலம்-கிராம்புகள், தங்கம், தந்தம், அரிசி, சந்தனம் முதலான பொருள்களின் மூட்டைகள் எல்லாம் வறியவர்கள் வாழும் சிறிய குடிசைகள் போல் அங்கங்கே தேங்கிக் கிடந்தன.