உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

445


ரோமாபுரிப் பாண்டியன் 445 ஆனால், அப்போது மூட்டம் போட்டிருந்த அரசியல் முகில்களுக் கிடையே தன்னுடைய எண்ணம் ஈடேறல் எளிதல்ல என்பதும் அவனுக்குத் தெரிந்திடாமல் இல்லை. அந்த வேளையில் தான் புலவர் காரிக்கண்ணனாரைப் பற்றிய நினைவு வந்தது. அவர்தம் அன்பினால் மட்டுமின்றிப் பண்பினாலும் கவரப்பெற்றவனே இளம்பெருவழுதி. அவருடைய பாடல்வரி ஒவ்வொன்றும் இனிக்கும் மலைவாழை: மணக்கும் மருக்கொழுந்து. அவரது உள்ளமோ மெல்லிய மல்லிகைப்பூ: கள்ளமே இல்லாதது..." என்றெல்லாம் தன் தோழர்களிடம் அவரைப் பற்றி அவன் ஏற்றிப் போற்றுவதுண்டு. இத்தகைய ஈடுபாடு அவரிடம் அவனுக்கு ஏற்பட்டதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. மதுரை மாநகரிலே பாட்டரங்கம் ஒன்று நடைபெற்றது. அதிலே இளம்பெருவழுதியும் தன்னுடைய பாடற் புனலை இனிமை பொங்கிடப் பாயவிட்டான். அதனைக் கேட்டுத் திளைத்திட்ட காரிக்கண்ணனார் தம்மை விட இளைஞன் தானே என்று இளக்காரமாக எண்ணிடவில்லை; அழுக்காற்றுக்கும் இடம் அளித்திடவில்லை; இவனுக்கெல்லாம் உலகப் புகழ் ஏற்படுவதா? என்று வயிற்றெரிச்சல் கொண்டு இழிந்த போக்கிலும் நடந்திடவில்லை. மாறாக, “அவையோர்களே! என்னைப் 'புலவன்' என்று எல்லாரும் கொண்டாடுகிறீர்கள். அவ்வாறு உங்களால் ஒப்புக் கொள்ளப் பெற்ற புலவனாகிய யானே, இந்த இளம்பெருவழுதியின் பாக்களைச் சுவைத்து மெய்சிலிர்த்து நிற்கிறேன். இவர் என்னை விடப் பெரும் புலவர் மட்டும் அல்லர்; 'உலகப் பெரும் புலவரே' ஆவார்! என்று மனம்விட்டுப் புகழ் மழை பொழிந்தார். அதுமட்டுமா? அவனைக் கட்டியணைத்து முன் நெற்றியிலே முத்தமும் ஈந்தார்; அந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு பாட்டரங்கமே துள்ளிக்குதித்துக் கரவொலி எழுப்பி, இன்ப வெள்ளத்திலே நீச்சலடித்தது. இவ்வாறு பரந்த மனப்பாங்கு கொண்ட அவர்தம் அரிய முயற்சியினால்தான் தன்னுடைய தந்தைக்கும் கரிகாலருக்குமிடையே நட்பு அரும்பிடலாயிற்று என்பதனை நன்றாக அறிவான் இளம்பெருவழுதி. எனவே தன்பால் எல்லையில்லாத அன்பு பூண்ட அவர் மூலமாகவே அவர்தம் அறிவுரையையும் துணையையும் கொண்டே தான் விரும்பியவளை அடைந்தால் என்ன என்னும் எண்ணமும் உண்டாயிற்று அவனுக்கு. அதே சமயம், சோழ மண்ணில் வாழும் அவரைக் கொற்கைப்பட்டினத்து இளவரசன் என்கின்ற நிலையில் வெளிப்படையாகப் போய்ச் சந்திக்கவும் அவன் விழைந்திடவில்லை. M