446
கலைஞர் மு. கருணாநிதி
446 கலைஞர் மு. கருணாநிதி அதனால் சில சிக்கல்கள் எழுந்திடுமோ என்கிற அச்சமே! எனவேதான் யவனக்கிழவர் வேடத்தை அவன் மேற்கொண்டான், காரிக்கண்ணனாரும் அவனுடைய உள்ளார்ந்த காதலை எண்ணி உதவிட இசைந்தார். அதே சமயம் அவசரம் கூடாதென்று அணை போடுவதிலும் குறியாக இருந்தார். அடிக்கடி தம்மைச் சந்தித்து அறிவுரை கேட்டிட வந்த அவனைக் காட்டிக் கொடுத்திடாமலும் காப்பாற்றினார். அதனாலேயே சொல்லொணாத் துன்பங்களையும் பழிச் சொற்களையும்கூடச் சுமந்திட்டார். - இளம்பெருவழுதி இவ்வாறாகத் தன் கதையினைச் சொல்லி முடித்திடும்பொழுது, கடைச்சாம வேளையாக இருக்கலாம். புகார் நகரத்துச் சேவல்கள் போட்டியிட்டுக் கொண்டு கூவலாயின. கீழ்வானில் வெள்ளி முளைத்து வெகு தொலைவுக்கு மேலேறி இருந்தது. தீவட்டி வெளிச்சத்தையே கூர்ந்து நோக்கியவண்ணம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான் கரிகாலன். பின்னர், 'உங்களுடைய எண்ணம் பெருவழுதிப் பாண்டியருக்குத் தெரியுமா!" என்று அமைதியாக வினவினான். "இன்னும் தெரியாது அரசே! தங்களுடைய எதிரியான இருங்கோ வேளின் தங்கையை நான் மணக்க விழைகிறேன் என்பது கடுகளவு தெரிந்தாலும் போதும்; என் தந்தை கொடுஞ்சினம் கொண்டு விடுவார் என் மீது! அதனால் தான் முதலில் தங்களுடைய ஒப்புதலைப் பெற்றுத் தங்கள் மூலமாகவே அவரை நான் அணுகிட எண்ணுகிறேன். தாங்கள் தான் அவரிடம் நயமாக எடுத்துரைத்து என் நம்பிக்கை நலிந்திடாதவாறு காப்பாற்றிட வேண்டும். இன்னொன்றையும் தெளிவுபடுத்தினால் தாங்கள் தவறாகக் கருதிட மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.' “என்ன அது?” "நான் தாமரையை மணப்பதால் அவள் சார்ந்த வேளிர் குடியின ருக்குப் பரிந்து கொண்டு ஏதேனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடு வேனோ என்று தாங்கள் ஐயுறவே தேவையில்லை. என்னால் எத்தகைய சிக்கலும் எழுந்திடவே எழுந்திடாது. இருங்கோவேள் தான் இயற்கை எய்திவிட்டார். அவருக்குப் பின்னர் வேளிர்குடியினரின் செல்வாக்கை உயர்த்திடும் அளவுக்கு அங்கே தளபதிகளோ தலைவர் களோ இருப்ப தாகவும் தெரியவில்லை. செந்தலையார் உயிரோடு இருந்தாலாவது ஏதேனும் செய்வார் என்று நாம் எண்ணி இடம் உண்டு. அவரும்தான் இறந்து போனார்! - இளம்பெருவழுதி இவ்வாறு புகன்றிடவும்- "ஆம்; மன்னர் மன்னவா! இளவரசர் இயம்புவது முற்றிலும் உண்மை. இருங்கோவேள் நெஞ்சிலே நஞ்சினைப் பாய்ச்சிக் கொண்டே இருந்த