உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

447


ரோமாபுரிப் பாண்டியன் 447 வர் அந்தச் செந்தலையார்தாம்? குரங்கினை ஆட்டி வைத்திடும் கோல் போலக் குழப்பங்கள் அத்தைைனக்கும் வித்திட்டவர் - ஏன், விதை யாகவே வேலை செய்தவர்-அவர்தாம்" என்றார் காரிக்கண்ணனார். 'அதற்கென்ன செய்வது புலவர் அவர்களே! செந்தலையாருக்குத் தாம் தொடர்ந்து அமைச்சராகவே பதவியில் நீடித்து, இந்த நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து அதிகாரஞ் செலுத்துவதற்கு முடியாமல் இந்தக் கரிகாலன் குறுக்கே வந்துவிட்டானே என்கிற ஆத்திரம். அதனால் தான் இருங்கோவேளைத் தூண்டிவிட்டு இந்தச் சோழ மண்டலத்தையே கைப்பற்றிடச் சூழ்ச்சிகள் பல புரிந்தார். அவருடைய உள்நோக்க மெல்லாம், இருங்கோவேளையும் அழித்துவிட்டுத் தாமே பேரரசர் ஆகிவிடவேண்டும் என்பது தான். நாட்டிலே அமைதியோ குழப்பமின் மையோ நிலவினால் அவருக்கு அறவே பிடிக்காதே! ஏதேனும் குட்டையை குழப்பிவிட்டு மீன் பிடிக்காவிட்டால் அவருக்கு உறக்கமே வராதாமே! பதவி வெறியைப் பற்றியோ சொல்லிடவே வேண்டாம்! 'செந்தலையார் - மற்றவர் வளர்ச்சியைக் கண்டால் வெந்தலைவார்!' என்று வேளிர் மக்களே அவரை கேலி செய்திடுதல் உண்டாம். வெளியிலே என்னவோ 'ஏழை பங்காளர்' என்றே பெரிய பெயர். அவர் வாழ்வதோ அடுக்கு மாளிகையில்; படுப்பதோ பட்டு மஞ்சத்தில்; குளிப்பதோ பன்னீர்த் தொட்டிகளில்! அவர் எப்படியோ வாழட்டும்; வசதிகளைத் துய்க்கட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், தம்முடைய பதவி வெறியைத் தணித்துக் கொள்வதற்காக இருங்கோவேளின் மனத்தையே கெடுத்து, இந்தச் சோழ மண்டலத்திற்கே தலைமை அமைச்சர் ஆகிவிடுவதற்கும், பின்னால் தாமே அரியணை ஏறுவதற்கும் சதிகள் புரியலாமா? பொய்களையே தளவரிசையாகப் போட்டு அதிலே புகழ் மாளிகையினை எழுப்பிட முயன்றால், அது எத்துணை காலத்திற்குத்தான் இடியாமல் நிலைத்து நிற்கும்? போகட்டும். அவர் இறந்துவிட்டார். அதற்காக நான் வருந்தாமல் இல்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் எவ்வளவோ மகிழ்ந்திருப்பேன்... ம் எங்கோ பேச்சைத் தொடங்கினோம்; எங்கோ வந்துவிட்டோம். இளவரசே! தாமரையைப் பொறுத்தவரை நீங்கள் உறுதியா. யாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?" என்று கேட்டான் கரிகாலன். ஆம்; மன்னர் அவர்களே! என்னுடைய உறுதிப்பாட்டில் இம்மி அளவுகூட விரிசலுக்கோ தளர்ச்சிக்கோ இடமே இல்லை. தங்களிடம் மனம்விட்டுச் சொன்னால்தான் என்ன தவறு? நான் கலையுணர்வு மிகுந்தவன்தான் என்றாலும் தாமரையைத் தவிர இதுகாறும் எந்த காரிகையையுமே நான் ஏறெடுத்துப் பார்த்ததே இல்லை; இனி பார்க்கப் போவதும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தாமரை இல்லை என்றால்