உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

கலைஞர் மு. கருணாநிதி


466 கலைஞர் மு. கருணாநிதி 'நான் ஓர் அறிவிலி! பெரும் புலவராகிய தங்களுக்குத் தெரியாதது என்ன இருக்க முடியும்?" என்று தனக்குத் தானே சலித்துக் கொண்ட செழியன், குலைகுலையாகக் காய்த்துத் தொங்கும் கமுக மரங்கள் சூழ்ந்த ஒரு பொய்கையருகே வந்ததுமே தேரினை நிறுத்தினான். அந்தப் பொய்கை விந்தையான காட்சியினை அளித்தது. இயல் - இசை-நாடகம் என்னும் முத்தமிழ் போல தாமரை, அல்லி, செங்கழுநீர்ப் பூங்கொடிகள் ஆகிய மூன்றுமே அங்கே விரவிக் கிடந்தன. ஒரு துறையிலே வாளிப்பான உடற்கட்டமைந்த கன்னிப்பெண்டிர் நீராடிக் கொண்டிருந்தனர். அதற்கு எதிர்த்துறையிலே இளங்காளையர்கள் மூச்சினைப் பிடித்துக்கொண்டு மூழ்கிக் கிடப்பதிலும், நீச்சலடிப்பதிலும் தங்கள் திறமையைக் காட்டியவண்ணம் விளையாடினர். புரவிகள் நீரினைப் பருகி நிமிர்ந்த பின்னர் அவற்றை மீண்டும் தேரிலே பூட்டுவதற்காகச் செழியன் திரும்பிடும் போது ஆடவர் துறையிலே நீராடிக் கொண்டிருந்த இருவர் உரையாடுவது அவன் செவியிலே தெளிவாக வந்து விழுந்தது. "மதிவாணா, உனக்குச் செய்தி, தெரியுமா?" "என்ன செய்தி, அறிவுடை நம்பி!" "இங்கே தந்தை சாகக்கிடக்கிறார், ஆனால் தனயனோ எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையாம்?" "நீ யாரைச் சொல்கிறாய்?' 'பெருவழுதிப் பாண்டியரையும் அவர் மகன் இளம் பெருவழுதி யைப் பற்றியுந்தான் சொல்கிறேன். இரண்டு முறை கொற்கைப்பட்டி னத்துக்கு ஆட்கள் போய்த் திரும்பி விட்டார்களாம்; இளவரசரையே காணோமாம்!* "இது என்ன விந்தையாக இருக்கிறதே! ஒருவேளை பெருவழுதிப் பாண்டியர் இறக்க நேரிட்டால், உடனே பட்டஞ் சூட்டிக் கொள்ளக் கூட அவர் வந்திட மாட்டாரோ? "எனக்கும் இதுதான் அச்சமாக உள்ளது. பாண்டிய நாட்டு நிலைமை என்னதான் ஆகப்போகிறதோ தெரியவில்லை" அதற்குமேல் அவர்கள் உரையாடியது செழியனின் செவியில் ஏறிடவில்லை. அந்தக் குடிமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தினைவிடப் பன்மடங்கு பெரிய அச்சம் இப்போது செழியனை வாட்டிடலாயிற்று. அவன், கவலை தோய்ந்த முகத்துடன் புரவிகளைத் தேரினில் பூட்டி ஓட்டத் தொடங்கிய பொழுது - பின்புறமாகத் தடதடவெனக் குதிரைகள் விரைந்து வரும் குளம்படியோசை அவன் காதுகளைப் பிளந்தது.