உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

467


ரோமாபுரிப் பாண்டியன் செழியன் திரும்பிப் பார்த்தான். 467 வேப்பமாலை முனையிலே சூட்டப்பெற்ற வேலினைக் கரத்தினில் ஏந்தியவாறே மறவன் ஒருவன் குதிரைமீது விரைந்து வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தினை கண்டதுமே...? அணை கடந்திடும் மகிழ்ச்சிவெள்ளம் பொங்கிற்று செழியன் மனத்தினில், அந்த மறவன் ஏதேனும் ஒரு நற்செய்தியினை ஏந்தியே வந் திருப்பான் என்னும் நம்பிக்கையும் அவனுக்கு ஏற்பட்டது. இல்லை யென்றால் வேப்பமாலை சூட்டப்பெற்ற வேலினைத் தாங்கி வந்திட வேண்டிய தேவையே இல்லையே? தங்களது சிறுதேரின் அருகே அவன் நெருங்கியவுடன் குறுக்கே சென்று அவனைத் தடுத்து நிறுத்திட நினைத்திட்டான் செழியன். அந்த மறவனோ அத்தகைய கடினமான பணியினைச் செழியனுக்கு வழங்கி டுவதா என்று கருதியவனைப் போலக் குதிரையைவிட்டுத் தானே கீழே குதித்திட்டான். "வணக்கம் அண்ணா! நலமா?" என்று கேட்கவும் கேட்டான். "வணக்கம்... வணக்கம்; நீ இப்போது கொற்கையில் தானே அலுவல் பார்க்கிறாய்?" 'ஆம் அண்ணா; அங்கே இளவரசருக்குத் துணை மெய்க்காவல னாகப் பணியாற்றுகிறேன்!' "அப்படியா? மெத்த மகிழ்ச்சி! உன்னை முதலில் சந்தித்தபொழுது நீ நன்றாக முன்னேறிவிடுவாய் திண்ணமாகவே எண்ணினேன்." என்று நான் "எல்லாமே தங்களுடைய கருணையினால் வந்திடும் பரிசுகள்தானே அண்ணா! தளபதி நெடுமாறர்கூட என்னைப் படையினில் சேர்த்திட முடியாது என்றுதானே முதலில் மொழிந்துவிட்டார்? தாங்கள்தானே அவரை வற்புறுத்தி இசைந்திட வைத்தீர்கள். அந்த நன்றியறிதலை என் உயிர் உள்ளளவும் என்னால் மறந்திட இயலுமா?' 1 "அப்படி ஒன்றும் உனக்கு நான் பெரிதாகச் செய்திடவில்லையே வடிவம்பலம்? உன்னிடம் இயற்கையாகவே திறமை இருக்கிறது: நீ முன்னுக்கு வருகிறாய். இடையிலே நான் வேண்டுமானால் சிறு கருவியாகப் பயன்பட்டிருப்பேன். அவ்வளவுதான். மேலும் ஒருவருடைய திறமை இருக்கிறதே. அது உதயசூரியனின் ஒளிக்கதிரைப் போன்றது; பெருந்தூணையே நட்டு வைத்தாலும், நீண்ட சுவரையே