468
கலைஞர் மு. கருணாநிதி
468 கலைஞர் மு. கருணாநிதி - எழுப்பி விட்டாலும் அதன் ஓட்டத்தினை - உயர்வினை ஆற்றலைத் தடுத்திடவோ, அழித்திடவோ முடிந்திடுமா?" செழியன் இவ்வாறு பகர்ந்திடும் போதே, தேரினுள் அமர்ந்திருந்த புலவர் காரிக்கண்ணனார் தம் தலையினைச் சற்று வெளியே நீட்டி, ஆமாம்; இளவரசர் இளம்பெருவழுதி இப்போது எங்கே? கொற்கைப்பட்டினத்தில் இல்லையா?” என்று குரல் கொடுத்தார்.
"ஏன், கொற்கையில்தானே இருக்கிறார்? விரைவினில் மதுரைக்கு வந்திடுவார்” என்றான் வடிவம்பலம். "நான் வேறு ஏதேதோ கேள்வியுற்றேனே! தலைநகருக்கு வந்திடு மாறு பாண்டிய வேந்தரிடமிருந்து தகவல் வந்தபொழுது இளவரசர் கொற்கையில் இல்லையாமே?" என்று வினவினான் செழியன். ஓ அதைப் பற்றிக் கேட்கிறீர்களா? சிறிது காலத்திற்கு முன்னர் கொற்கை நகரிலே 'மாகதி மொழிக்காரன்' ஒருவன் வேண்டுமென்றே மொழிப்பூசலைக் கிளப்பி விட்டான் அல்லவா? அதன் தொடர்ச்சியாகப் பழி வாங்கத் தயங்கிடாத அவன், தன்னந்தனியாக உலவச் சென்றிட்ட நம் இளவரசரைத் தன் ஆட்களை விட்டு மடக்கித் தெற்கு வெள்ளாறு வரை கொண்டு சென்றிருக்கிறான். அந்த வேளையில்தான் தலைநகரிலிருந்து செய்தி வந்தது. ஆனால் அந்த மொழிப் பகைவர்களை முறியடித்து வீழ்த்தி விரட்டி விட்டு வெற்றியோடு கொற்கைக்குத் திரும்பி விட்டார் நம் இளவரசர். அவர் மதுரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்னும் செய்தியினை முன்கூட்டியே தெரிவித்திடவே என்னை இப்போது அனுப்பி வைத்திட்டார்." ...அந்த அங்காடிக்காரன் அடாத செயல் பற்றி இப்போது தேரினில் வந்திடுங்காலைதான் புலவர் காரிக்கண்ணனார் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கோர் ஐயப்பாடு..." 4 "என்ன அண்ணா?" “பொதுவாக நம் அங்காடிக்காரர்கள் தங்களிடம் விற்பனைக்குள்ள பண்டங்களைக் குறித்திடும் கொடிகளை நட்டு வைத்தோ. ஆட்டியோ வாங்குவோரைக் கூவி அழைப்பதுதானே வழக்கம்? அந்த 'மாகதி மொழிக்காரன்' மட்டும் ஏன் கொடி எதனையும் பயன்படுத்திடாமல் பலகையிலே தன் அங்காடியின் பெயரை வழக்கமில்லாத வழக்கமாக எழுதிப் போட்டு வைத்திருந்தான்! ஏன் "அதுதானே அண்ணா, எல்லாருக்கும் புதிராகவும், அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏதாவது ஒரு புதிய முறையினைக் கையாண்டு இங்குள்ள மக்களை வியப்பிலே ஆழ்த்தி அதன் மூலம்