உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

497


ரோமாபுரிப் பாண்டியன் 497 ரோமாபுரிக்கு யாரைத் தூதுவராக அனுப்புவது என்பதைப் பற்றிப் பெருவழுதிப் பாண்டியன் வெளியிட்ட முடிவினைக் கேட்டதும் முத்துநகைதான் களிப்புக் கடலிலே மூழ்கித் திளைத்திட்டாளேயன்றிக் காரிக்கண்ணனார் கருத்து எதனையும் கூறிடவில்லை; ஆழ்ந்த சிந்தனை யுடனேயே அவர் அமர்ந்திருந்தார். அந்தப் பொறுப்பும் புகழும் மிக்க பதவிக்குப் பொருத்தமான ஆள் இளம்பெருவழுதியா, நெடுமாறனா என்று இருவரைப் பற்றி மட்டுமே பொதுமக்கள் தத்தம் ஊகங்களை உலவவிடச் செய்து கொண்டிருக்கும் வேளையில் இளம்பெருவழுதி ஏற்புடையவன்' என்று தாமும் சோழப் பேரரசருமே திண்ணமாக எண்ணிக் கொண்டிருக்கிற நிலையில் செழியனின் பெயர் சற்றுத் திகைப்பினையே அளித்திட்டது புலவருக்கு. 1 - பெருவழுதியின் முடிவு பாண்டிய நாட்டு மக்களிடையே எத்தகைய வரவேற்பிற்கு இலக்காகிடுமோ என்பது ஒரு புறம் இருக்கக் கரிகாலன் உள்ளத்திற்கு அது கசப்பினைக் கொடுத்திட்டால் என்ன செய்வது என்னும் கலக்கமும் உண்டாகாமல் இல்லை அவருக்கு. ஆனால், புலவரின் நெஞ்சக் கடலினடியில் ஓடிடும் நினைவோட் டத்தினை அப்படியே ஊடுருவிப் படம் பிடித்து விட்டவரைப்போல், "என்ன புலவர் அவர்களே! தாங்கள் கருத்து ஏதும் பகர்ந்திடாமல் அமைதியாக இருக்கிறீர்களே! கரிகாலன் வருத்தமுறுவாரோ என்கிற வாட்டமா?” என்று முறுவலித்தவாறே கேட்டான் பாண்டிய வேந்தன். "ஆம், மன்னவா. அவர் விழைந்ததும் - என்னிடம் மொழிந்ததும் இளவரசன் இளம்பெருவழுதியைப் பற்றித்தான். இப்போது செழியன் செல்லப் போவது குறித்துக் கேள்வியுற்றால் அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று தான்" "கவலைப்படாதீர்கள், புலவர் அவர்களே! செழியனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையில், இளம்பெருவழுதி ஏற்றவன் என்று அவர் எண்ணியிருத்தல் கூடும். ஆனால், இப்போது செழியனைப்பற்றிக் கேள்வியுற்றதும், அவர் கண்டிப்பாகத் தம் கருத்தினை மாற்றிக் கொண்டு விடுவார். அதுமட்டும் அன்று; அவன்தான் பொருத்தமான தூதுவன் என்று அவர் வாயாலேயே புகன்றிடவும் போகிறார் பாருங்களேன்!" 'தங்கள் கூற்றினை நான் மறுத்திடுவதாக நினைக்க வேண்டாம், அரசே! ஆனால் இளவரசரைத் தூதுவராக அனுப்பி வைப்பதில் தங்களுக்கு ஏன் தயக்கம் என்பதை நான் அறிந்திடலாமா?" 14 அவன் இளவரசனாக இருப்பதுதான்!" என்று சிரித்திட்டான் பெருவழுதி,