உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

கலைஞர் மு. கருணாநிதி


498 கலைஞர் மு.கருணாநிதி "தாங்கள் விளம்புவது எனக்கு விளங்கிடவில்லையே!" என்று தம் திகைப்பினை வெளிப்படுத்தினார் காரிக்கண்ணனார். வேறொன்றும் இல்லை, புலவர் அவர்களே! இளம்பெருவழுதி சாதாரண நிலையில் உள்ளவன் அல்லன். நம்முடைய பாண்டிய மண்டலப் பேராளுகையின் கீழ் உள்ள கொற்கைப்பட்டினத்தை ஆண்டு கொண்டிருப்பவன். அவனை இப்போது அங்கிருந்து கிளப்பி ரோமா புரிக்கு அனுப்பி வைத்திட்டால், பிறகு, யாரை அங்கே இளவரசனாக அமர்த்துவது? வழிவழியாக வந்துள்ள மரபினை ஒட்டிக் கொற்கைப்பட் டினத்தின் தனி நிருவாகத்தினை யாரிடம் ஒப்படைப்பது என்பதே பெருஞ் சிக்கலாக உருவெடுத்து விடாதா?" "ஏன், வேறு மாற்றுவழி மூலம் தீர்வு கண்டிட முடியாதா?" "எப்படி முடியும் புலவர் அவர்களே!" "கொற்கைப் பட்டினத்தைத் தங்களுடைய நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்துவிட்டால் என்ன?" "தாங்கள் மொழிவதும் ஒரு வகையில் சரிதான். ஆனால் நான் அவ்வாறு விழைந்திடவில்லை. ஏன் தெரியுமா? நம்முடைய பாண்டிய மண்டலம் இருக்கிறதே, இது ஒரு பரந்த நாடு; பல்வேறு வகைப்பட்ட மக்கள் உறைந்திடும் நாடு. இங்கே ஆட்சிப் பொறுப்பு - அதிகாரக் குவிப்பும் ஒரே இடத்தினில் திரண்டிருப்பது நல்லது அல்ல; ஏனெனில் நம்முடைய ஆளுகையின் சீரிய பலன்கள் நேரிய திட்டங்கள், ஏழை நடுத்தர மக்களை எளிதாக -விரைவாக -எட்டிடமாட்டா, அதன் பொருட்டு. இந்த மாபெரும் பாண்டிய மண்டலத்தையே ஐந்தாறு மாநிலங்களாகப் பகுத்து, அவற்றின் முன்னேற்றத்திற்கு எத்தகைய முட்டுக்கட்டையும் ஏற்படாத வண்ணம் சுயாட்சியினையே வழங்கி, அதே சமயம் அவை அனைத்தும் ஒரே பேராளுகையின் கீழ் இயங்கிடும் கூட்டாட்சி முறையினைத் தோற்றுவித்திடலாமா என்று அண்மைக் காலமாக நான் சிந்தித்து வருகிறேன். ஆகவே தன்னாட்சித் திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்திடும் கொற்கையின் தற்போதைய ஆட்சி அமைப்பினைக் குலைத்திட வேண்டாம் என்றே கருதுகிறேன். "தாங்கள் விரிவாக உரைத்த பின்னரே எனக்கும் தெளிவாக விளங்குகிறது அரசே! சுயாட்சி என்பது மாட்சி மிக்க அரிய திட்டம்தான். ஒரு பரந்த கொல்லையிலே சிறுசிறு பாத்திகளைக் கட்டிப் பயிர்களைச் செடிகளை விளைவித்தல் போல ஒரு பெரிய நாட்டினைச் சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்குத் தன்னாட்சியினை வழங்கிடுதல்