உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

521


ரோமாபுரிப் பாண்டியன் 521 ஜூனோவுக்கு எப்படித் தெரியும்? அத்துடன் அவளைப் போன்ற அறிவாளியான பெண்கள் திடீர்க் காதலுக்கெல்லாம் அவ்வளவு எளிதாக இரையாகிவிடுவார்களா என்ன?" "நீங்கள் உரைப்பதும் உண்மைதான் தூதுவர் அவர்களே! ஜூனோ ஒரு நெருங்க முடியாத நெருப்புத் துண்டுதான் என்று எல்லாரும் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்" தேர் இப்போது ஓர் அகலமான வீதியில் திரும்பிற்று. இருமருங்கிலும் உயரமான கட்டடங்கள் புதுமெருகுடன் பளபளத்தன. அவற்றின் வகைவகையான வண்ணப்பொலிவு கண் ணைக் கவர்ந்திட்டது. "இந்தக் கட்டடங்கள் எல்லாம் விண்ணையே தொட்டு விடும்போல் இருக்கின்றனவே!..." என்று தன் வியப்பினை வெளிப்படுத்தினான் செழியன். "அப்படியெல்லாம் அவை விண்ணைத் தொட்டிட முடியாது தூதுவர் அவர்களே! அவற்றின் உயரத்திற்கும் உச்சவரம்பு வைத்திருக் கிறார் எங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்றான் சிப்பியோ. “கட்டடத்தின் உயரத்திற்குக்கூட உச்ச வரம்பா? வேடிக்கையாக இருக்கிறதே! "வேடிக்கை இல்லை; விளையாட்டும் இல்லை; உண்மையாகத்தான் உரைக்கிறேன். அணி அணியாக உள்ள இந்தக் குடியிருப்பு வீடுகள் அறுபது அடிக்குமேல் உயரமாக இருந்திடக்கூடாது என்று வரையறை செய்துள்ளார். அதோ தெரிகிறதே பார்த்தீர்களா? பழமையான கட்டடங்கள் கொண்ட ஒரு பகுதி?" ஆமாம், உயரமான தூண்கள் கொண்ட ஒரு கற்பீடம் கூடத் தெரிகிறதே! அது என்ன?” "அதுதான் பழைய ஃபோரம் என்பது; அதாவது நகரப் பொதுமன்றம் மிகமிகத் தொன்மையான காலத்திலேயே உருவானது அது. "அங்கே புதிய கட்டடங்களும் தென்படுகின்றனவே?" "அவையெல்லாம் இப்போது அகஸ்டஸ் மன்னரால் புதுப்பிக்கப் பட்டவை.' "அந்தக் கட்டடங்களுக்கு நடுவே ஒரு புதிய ஆலயம் கூடத் தெரிகிறதே! அது எந்தத் தெய்வத்திற்கு உரியது?"